‘இத்தனை மணி நேரத்தில் எழுதினேன்’ – விசில் போடு பாடல் விமர்சனங்கள் குறித்து மதன் கார்க்கி

0
131
- Advertisement -

விஜய் நடித்துள்ள GOAT படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் வரிகள் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. லியோ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் GOAT படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடம் வெளியாகி இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். மேலும், ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடனமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த பாடல் ஒரு தரப்பு ரசிகர்ளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலுக்கு யுவனுக்கு பதிலாக அனிருத் இசையமைத்து இருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறி வரும் நிலையில் இன்னொரு புறம் இந்த பாடலின் வரிகள் நன்றாக இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த பாடலின் வரிகளை எழுதிய மதன் கார்க்கி ‘விசில் பாடலை எழுதும் போது விஜய்யின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், படத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு வரலாம் என்று வெங்கட் பிரபு சொல்லியிருந்தார். பார்ட்டி என்பது கொண்டாட்டமான பார்ட்டி போன்ற அர்த்தங்களையும் கொண்டிருக்கலாம்.

மைக்க கையில் எடுக்கட்டுமா என்பது அரசியலை குறிப்பதாக மட்டும் இருக்காது. எல்லாவற்றுக்கும் மைக் தேவைப்படும். தமிழில் அதிகம் எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும். ஆனால், இந்த பாடல் இளைஞர்களுக்கு சென்று சேற வேண்டும் என்பதால் பல வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுத வேண்டி இருந்தது. அதே போல முதலில் விசில் போடுக்கு பதிலாக சல்யூட் வார்த்தையை பல மொழிகளில் பயன்படுத்த திட்டமிட்டேன். கடைசியில் அதை மட்டும் விசில் போடு என மாற்றி கொண்டாட்ட பாடலாக இதை உருவாக்கினோம் இந்த பாடல் வரிகளை வெறும் 4 மணி நேரத்தில் எழுதியதாகவும் கூறியுள்ளார் மதன் கார்க்கி.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக விஜய் படம் என்றாலே அதற்கு பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. தலைவா படம் துடங்கி இறுதியாக வெளியான லியோ படம் வரை பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார் விஜய். அதிலும் லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி தான் பாடலில் இடம்பெற்ற போதை சம்மந்தமான வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இதனால் படத்தில் இந்த பாடல் வரிகள் நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல லியோ படம் வெளியான போது விஜய் தனது அரசியல் வருகையை அறிவிக்கவில்லை. ஆனால், GOAT படத்தின் அறிவிப்புக்கு பின்னர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கினார். மேலும், தனது 69வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டு அரசியல் பணிகளை செய்யப் போவதாகவும் விஜய் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement