நடிகை விஜயலட்சுமி விவகாரம் – ஏற்கனவே சிறையில் இருக்கும் ஹரி நாடாருக்கு மேலும் ஏற்பட்ட குடைச்சல்.

0
776
seeman
- Advertisement -

பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும் என்று பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூர் போலீஸ் கடிதம் அனுப்பியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவர் 1997 ஆம் ஆண்டு நாகமண்டலம் என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

-விளம்பரம்-

தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அதோடு இவர் சீமான் இயக்கிய வாழ்த்துக்கள் படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். பின் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அங்கேயும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

சீமான்-விஜயலக்ஷ்மி பிரச்சனை:

மேலும், சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் சமூக வலைத்தளங்களில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று விஜயலக்ஷ்மி புகார் செய்திருந்தார்.

விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ:

சீமானின் தாயாரைப் பற்றிப் பேசியதால்தான், நான் விஜயலட்சுமியை மிரட்டினேன்!''-  ஹரி நாடார் பேட்டி | Hari Nadar talks about his controversial video about  Seeman - Vijayalakshmi issue

இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பல்வேறு கருத்துக்களும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் சீமான் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று சோசியல் மீடியாவில் விஜயலட்சுமி தற்கொலை செய்ய முயன்ற வீடியோவை 2020 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிட்டு இருந்தார். பின் விஜயலட்சுமியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

-விளம்பரம்-

மருத்துவமனையில் தர்ணா செய்த விஜயலக்ஷ்மி:

மேலும், விஜயலட்சுமி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து எனக்கு நியாயம் வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார். உடல்நலம் சரியாக நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேறி விட்டதாகவும் தன்னை சீமான், ஹரிநாடார் இருவரும் சேர்ந்து மிரட்டுவதாகவும் கூறி இருந்தார். உடனே சீமான், ஹரிநாடார் இருவரையும் கைது செய்ய வேண்டும் என விஜயலட்சுமி போராட்டம் செய்து இருக்கிறார்.

கர்நாடக பா.ஜ.க பிரமுகரை ஏமாற்றினாரா? - தன்னிலை வீடியோ வெளியிட்ட ஹரிநாடார் |  hari nadar explains about his case charged in bangalore

ஹரி நாடாரை கைது செய்யவேண்டும்:

அதோடு இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்து இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் தற்போது மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கிறார் ஹரிநாடார். இப்படி ஒரு நிலையில் விஜயலட்சுமி ஹரி நாடாரை கைது செய்யவேண்டும் என்று புகார் அளித்ததில் இருந்து பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மயூர் போலீஸ் ஹரி நாடாரை கைது செய்ய கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement