வெறும் இத்தனை நொடி வித்தியாசத்தில் தங்கப் பதக்கம் வென்ற மாதவன் மகன் – மாதவனின் உருக்கமான பதிவு.

0
492
Madhavan
- Advertisement -

நடிகர் மாதவனின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற நிலையில் தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நடிகர் மாதவன், சரிதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது. வேதாந்த் மாதவன் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். இதனால் இவர் நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-360.jpg

அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார். இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

நீச்சல் வீரன் வேதாந்த்:

இந்த நிலையில் தன்னுடைய மகனின் நீச்சல் பயிற்சிக்காக நடிகர் மாதவன் தன் மனைவியுடன் துபாய்க்கு குடி பெயர்ந்து உள்ளார். இதுகுறித்து இவர் பேட்டியும் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் எல்லாம் மூடப்பட்டு உள்ளது. நானும் என்னுடைய மனைவியும் எங்களுடைய மகன் உடன் துபாயில் இருக்கிறோம். இங்கு சிறந்த நீச்சல் குளங்களில் பயிற்சி பெற முடிகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்காக வேதாந்த் தயாராகி வருகிறார்.

வெளிநாட்டில் வெள்ளிப் பதக்கம் :

அவருக்கு தேவையான உதவிகளை நானும் என்னுடைய மனைவி சரிதாவும் செய்து வருகிறோம். அது மட்டும் இல்லாமல் எங்களுடைய மகன் உலகம் முழுவதும் நடைபெற்ற பல நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்படி ஒரு நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் (copenhagen) நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் மாதவன், 1500 மீட்டர் free பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். 

-விளம்பரம்-

வெள்ளிப்பதக்கம் :

டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியின் 200 மீட்டர் Fly பிரிவில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தங்கம்வென்றுள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் மாதவன். அதில் ‘கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபனில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் கருணையுடனும் சஜன் மற்றும் வேதாந்த் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். பயிற்சியாளர் பிரதீப் சார், SFI மற்றும் ANSA ஆகியோருக்கு மிக்க நன்றி.

தங்கப்பதக்கம்.

நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். அதே போல தனது மகன் வெள்ளி பதக்கம் வென்ற தருணத்தின் வீடியோவையும் பகிர்ந்து இருந்தார் மாதவன். இப்படி ஒரு நிலையில்இன்று நடைபெற்ற 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்று இருக்கிறார் வேதாந்த். அதிலும் வெறும் 10 மில்லி நொடிகள் வித்யசத்தில் தங்கத்தை தட்டி சென்றுள்ளார் வேதாந்த், அதே போல நேற்று 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சஜன் பிரகாஷ், 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஐந்தாவது இடம்பிடித்தார்

Advertisement