‘ருத்ர தாண்டவம்’ படத்தைச் சுட்டிக்காட்டி கிறிஸ்துவ மதபோதகர் வழக்கில் தீர்ப்பளித்த மதுரை நீதி மன்றம்.

0
276
george
- Advertisement -

ருத்ர தாண்டவம் படத்தை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி தீர்ப்பளித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான படம் திரௌபதி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது, இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது.

-விளம்பரம்-

நாடக காதல் கதையை மையமாக வைத்து திரௌபதி படத்தை இயக்கியிருந்தார். மேலும், திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன். இந்த படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

- Advertisement -

ருத்ரதாண்டவம் படம்:

போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் ருத்ரதாண்டவம். மதமாற்ற அரசியல் களத்தை கொண்ட கதை ருத்ர தாண்டவம். ருத்ர தாண்டவம் படத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னரும் சலுகைகளுக்காக பழைய மதத்தின் அடையாளத்தை பயன்படுத்தும் அரசியலை காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கருத்துக்கள் எழுந்தன.

Rudhra Thandavam Review

ருத்ர தாண்டவம் பட பாணியில் தீர்ப்பு:

இந்த நிலையில் கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது செய்த விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் மாண்புமிகு நீதிபதி ருத்ர தாண்டவம் படத்தில் வரும் குறிப்பிட்ட கிரிப்ட்டோ கிறிஸ்டியன் வசனத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பு கொடுத்து இருக்கிறார். மேலும், இந்திய சினிமாவிலேயே ஒரு படத்தை முன்வைத்து நீதிமன்றம் கூறும் ஒரு பெரிய தீர்ப்பு இது தான் என்ற பெருமையை தேடித் தந்த ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி என்று ருத்ர தாண்டவம் படத்தின் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
rudra thandavam

பிசிஆர் சட்டம்:

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக நல்லிணக்கத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது ஜாதியினரை பலிவாங்கிய பிசிஆர் எனப்படும் ஜாதிய வன்கொடுமை சட்டம். இதை தடை செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு தான் தீண்டாமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் 1976 இல் பிசிஆர் அதாவது குடியுரிமை பாதுகாப்பு சட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டது.

rudra thandavam

வன்கொடுமை தடுப்பு சட்டம்:

இந்த சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்கு பொருந்தவில்லை. இதனால் இந்த சட்டம் சரியாக செயல்படாததால் இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசாங்கம். பின் 1989 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement