ஜெயலலிதாவின் மகள் என்று தாசில்தாரிடம் ரகளை செய்த பெண் – அப்பா, இந்த நடிகராம். (இதோட 3வது பொண்ணு)

0
831
Jayalalitha
- Advertisement -

புரட்சித்தலைவியாகவும், தமிழக மக்களின் அம்மாவாகவும் இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவர் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். பின் மறைந்த எம்ஜிஆர் மீது இருந்த பற்றின் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். அதற்கு பிறகு புரட்சித்தலைவி, அம்மா என்று இவருக்கு மக்கள் ஆதரவளித்தார்கள். மேலும், இவர் அரசியலில் நுழைவதற்கு முன் 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் அரசியலில் நுழைந்த உடன் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி விட்டார்.

-விளம்பரம்-

மேலும், அதிமுக கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1991ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஆனார். அதனை தொடர்ந்து இவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார். இவர் இறக்கும் போது கூட தமிழக்தின் முதல்வராக இருந்து தான் இறந்தார். மேலும், ஜெயலலிதாவிற்கு திருமணம் ஆகாதது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், இதை பல பேர் பயன்படுத்தி கொண்டு நான் தான் ஜெயலலிதா அம்மாவின் வாரிசு என்று அப்பப்போ சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் ஜெயலலிதா அம்மாவின் வாரிசு நான் தான், இறப்பு சான்றிதழ் கொடுங்கள் என்று கேட்டு இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

மதுரை பெண் செய்த காரியம்:

மதுரை மாவட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி மீனாட்சி. இவருக்கு 38 வயது ஆகிறது. சென்னை போயஸ் கார்டனில் தன்னுடைய தாயார் இறந்து விட்டதாகவும், அவரது வாரிசாக வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டுமென்று ஆன்லைன் மூலம் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார். அதாவது ஜெயலலிதாவின் வாரிசு மீனாட்சி தான் என கேட்டு சான்றிதழ் கேட்டு இருந்தார். ஆனால், மனுவின் மீது அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பில் போட்டுவிட்டார்கள். பின் மனு அளித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆனதால் ஆவேசமான மீனாட்சி மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்று முறை இட்டார். ஆனால், அங்கிருந்த துணை தாசில்தார் இறந்தவர் சென்னையை சேர்ந்தவர் என்பதால் சென்னையில் வாங்கி கொள் என்று கூறி இருக்கிறார்.

ஜெயலலிதா அம்மா வாரிசு சான்றிதழ் கேட்டு நடந்த பிரச்சனை:

இதனை மீனாட்சி ஏற்க மறுத்தார். பின் மீனாட்சி துணை தாசில்தார் இடம் தன் தந்தையும் தாயும் தன்னை அனாதையாக விட்டுவிட்டு சென்று விட்டதாகவும், பழனியில் தங்கரதத்தின் உரிமையை தன் தந்தை சோபன்பாபு எனக்கு வழங்கி விட்டு சென்றிருக்கிறார். அதற்கான ஆவணங்கள் பெற்றிருக்கிறேன். நான் தான் அவர்களின் வாரிசு. எனக்கு வாரிசு சான்றிதழ் கொடுங்கள் என்று கேட்டார். ஆனால்,துணை தாசில்தார் தர மறுக்கிறார். இதனால் மீனாட்சி, தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. பின் துணை தாசில்தார் அவர்கள் நீதிமன்றம் சென்று உங்கள் உரிமையை பெற்று வாருங்கள். அதற்குப் பிறகு நானே சான்றிதழ் தருகிறேன் என்று கூறி மீனாட்சியை அனுப்பி வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

மீனாட்சி அளித்த பேட்டி:

இதனை அடுத்து பிரபல சேனல்கள் எல்லாம் மீனாட்சியிடம் பேட்டி எடுத்தது. அதில் மீனாட்சி கூறியது, நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பாட்டியின் வளர்ப்பில் தான். என்னுடைய அம்மா ஜெயலலிதா. நான் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் போட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகிறது. இதுகுறித்து விசாரிக்க தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நான், சோபன் பாபு- ஜெயலலிதா மகள் என்று சொல்லும்போது அவர்கள் கிண்டல் செய்து பேசினார்கள். எனக்கு பயங்கரமாக கோபம் வந்து விட்டது. பின் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டேன். என்னுடைய அப்பா சோபன் பாபு பழனியில் தங்க ரத சேவையை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார். என்னுடைய பேர் அதில் இருக்கிறது. என் அப்பாவிற்கு பின் எனக்கு தான் என்று என் அப்பா என் பெயரில் கொடுத்து இருக்கிறார். அந்த ஆவணமும் இருக்கிறது.

ஜெயலலிதா வாரிசு குறித்து மீனாட்சி சொன்னது:

அம்மா உயிருடன் இருக்கும்போது நடராஜன் மாமா சசிகலாவின் கணவர் என்னை பார்க்க வருவார். ஒரு முறை அவர் போயஸ் கார்டனில் என்னைக் கூப்பிட்டு இவர்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று எல்லோரிடமும் சொன்னார். அப்போது என்னை பார்த்து கருப்பாக இருக்கிறாரே? என்று கேட்டார்கள் அதற்கு அவர் இவர்தான் ஜெயலலிதா வாரிசு என்று ஆணித்தரமாக சொன்னார். ஆனால், இப்போது அவர் இறந்துவிட்டார். என் அம்மா இறந்த பிறகு எல்லா ஆவணங்களையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. என்னிடம் ஆவணம் கேட்டால் எப்படி தரமுடியும். என்னுடைய அப்பா அம்மாவுடைய இறப்பு சான்றிதழ் வைத்து தான் நான் வாரிசு தாக்கல் செய்ய முடியும். எல்லா அரசு அதிகாரிகளுக்கும் நான் தான் ஜெயலலிதா வாரிசு என்று தெரியும்.

ஆதாரம் குறித்து மீனாட்சி சொன்னது:

ஆனால், ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை. என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ பிரச்சனை இருக்கிறது மட்டும் எனக்கு தெரிகிறது. அது மட்டுமில்லாமல் அம்மா இறந்து போன பிறகு எதுவும் செய்ய வேண்டாம் என்று உளவுத்துறை போலீசு சொல்லி இருந்தார்கள். அதனால் தான் நான் அமைதியாக இருந்தேன். டிஎன்ஏ, இரத்த பரிசோதனை செய்ய நான் தயார். என்னுடைய அம்மா ஜெயலலிதா தான். என்னிடம் ஆதாரம் இருக்கு. அதை நான் கண்டிப்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். எனக்கு எந்த பயமும் இல்லை. நீதிமன்றத்திற்கு என்ன தேவையோ அதை எல்லாத்தையும் நான் சமர்ப்பிப்பேன் என்று கூறி இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமாக மீனாட்சியை விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.ஏற்கனவே ஜெயலலிதாவின் மகள் என்று கூறி இரண்டு பேர் சொல்லியிருந்தனர்.  இப்போது மூன்றாவதாக ஒருவர் தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement