இந்த காமெடி ஞாபகம் இருக்கா ? செந்தில் அணிந்துள்ள டி-ஷர்ட்டில் இப்படி ஒரு தவற செஞ்சிருக்காங்களா.

0
1598
senthil

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை மன்னனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் செந்தில். செந்தில், கவுண்டமணி இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் காமெடிகள் எல்லாம் வேற லெவல். அதிலும் இவருடைய வாழைப்பழம் காமெடி தற்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் கூட வரவேற்கப்பட்டு வருகிறது. தற்போது இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் 23 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயமும் செய்து வந்திருக்கிறார். இது பற்றி பலருக்கும் தெரியாது.

🤣🤣🤣🤣

Camera Rolling Action 3.0 ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 7, 2020

தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது. கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த கால கட்டத்தில் சினிமாவில் ஏற்படும் தவறுகளை ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், இப்போது சொல்லவா வேண்டும். அதிலும் கொரோனா காலக்கட்டத்தில் போரடித்து போன நெட்டிசன்கள் பழைய படத்தில் வந்த தவறுகளை கூட தேடி பிடித்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் சரத்குமார் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மஹா பிரபு’ படத்தில் வரும் ஒரு காமெடி சீனில் நடிகர் செந்தில் ஒரு வெள்ளை டி-ஷிர்ட்டை அணிந்திருப்பார். ஆனால், அதே டி-ஷர்ட்டை கொஞ்சம் நேரத்துக்கு முன்னாள் வரும் ஒரு காட்சியில் பெண் ஒருவர் அணிந்து இருப்பார். தற்போது இதை கண்டுபிடித்து அதனை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement