விவாகரத்து சர்ச்சை, சிறை, மருத்துவமனையில் அனுமதி – பல சோதனைகளை தாண்டி திருமணத்திற்கு பின் தன் முதல் பிறந்தநாளை கொண்டாடிய மகாலக்ஷ்மி.

0
477
- Advertisement -

திருமணத்திற்குப் பிறகு பல சர்ச்சைகளுக்கு மத்தியில் முதல் பிறந்த நாளை நடிகை மகாலட்சுமி கொண்டாடியிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். படிப்பு முடிந்ததும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அரசி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 11 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சச்சின் என்ற மகனும் இருக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

- Advertisement -

மகாலட்சுமி திருமணம்:

பின் தன்னுடைய மகனுடன் மகாலட்சுமி தனியாக தான் வாழ்ந்து வந்தார். அப்படியே தொடர்ந்து மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார். சன் டிவி, ஜீ தமிழ் என பிரபலமான சேனல்களில் ஒளிபரப்பாகும் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வில்லியாக மிரட்டிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மகாலட்சுமி இரண்டாவது ஆக தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது இரண்டு பேருக்குமே இரண்டாம் திருமணம் தான்.

திருமணத்திற்கு நடந்த சர்ச்சை:

சில மாதங்கள் இவர்களுடைய திருமணம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காகவே சென்றிருந்தது. இருந்தாலும், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருவருமே சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு ரவீந்திரனை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் ஜாமினில் இருந்து வெளியே வந்தார். அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார்.

-விளம்பரம்-

மகாலக்ஷ்மி பிறந்தநாள்:

அப்போது மகாலட்சுமியும் எந்த ஒரு பதிவையும் போடவில்லை. அவர் தனியாக இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனையாகி விட்டது என்றும் மகாலட்சுமி விவாகரத்து வாங்க போவதாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. இந்த நிலையில் பல சர்ச்சைகளுக்கு பிறகு திருமணம் ஆகி முதன்முதலில் நடிகை மகாலட்சுமி பிறந்த நாளை கொண்டாடுகிறார். இது தொடர்பாக அவர் உருக்கமான பதிவு ஒன்றும் போட்டு இருக்கிறார். அதில் அவர், இன்று என்னுடைய பிறந்தநாள். பலரும் வாழ்த்துக்களை சொல்லி இருந்தார்கள்.

மகாலக்ஷ்மி பதிவு:

முதலில் என்னுடைய கணவர் இரவில் எனக்கு ஒரு சுவையான கேக் வாங்கி வாழ்த்து சொல்லி இருந்தார். அது என்னை ரொம்பவே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இரண்டாவது ஆக என்னுடைய அம்மாவும், சகோதரனும் என்னை மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அன்னதானம் வழங்கினார்கள். அது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான அனுபவத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு என்னுடைய அம்மா, சகோதரருக்கு தான் நன்றி சொல்லணும். அதற்கு பின் என்னுடைய அப்பா எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இப்படி என்னுடைய பிறந்தநாளில் நிறைய சந்தோஷமான விஷயங்கள், ஆச்சரியங்கள் நடந்தது. இதற்காக நான் என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், என்னை நேசிப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Advertisement