கொடிகட்டி பறந்த நடிகை, திருமணத்திற்குப் பிறகு படித்து செய்த சாதனை – அத்தனைக்கும் காரணம் கணவர்

0
402
- Advertisement -

பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி குறித்து பலரும் அறிந்திடாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பழம்பெரும் நடிகை எல் விஜயலட்சுமி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர். இவர் நடிகை மட்டும் இல்லாமல் சிறந்த நடனம் ஆடக்கூடியவரும் ஆவார். இவரை அனைவரும் விஜி என்றுதான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-

இவர் முதன் முதலில் தமிழில் நடித்த படம் பவானி. இதனை அடுத்து இவர் சுமைதாங்கி, என் கடமை, ஆயிரத்தில் ஒருவன், பஞ்சவர்ணக்கிளி, காக்கும் கரங்கள், வல்லவன் ஒருவன், மகா கவி காளிதாஸ், ஊட்டி வரை உறவு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தமிழில் இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

விஜயலக்ஷ்மி குறித்த தகவல்:

இப்படி இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற ஆடலுடன் பாடல் என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் மறைந்த நடிகரும், முன்னாள் முதல்வரும் ஆன என் டி ஆர் உடன் மட்டும் விஜி 80 படங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் சுரஜித் குமார் டி தத்தா என்ற வேளாண்மை அறிவியலாளரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.

விஜயலக்ஷ்மி திருமணம்:

அதோடு சுரஜித் அவர்கள் நடிகை விஜயின் சகோதரரின் நண்பர் ஆவார். விஜயின் சகோதரரும், சுரஜித்தும் ஒன்றாக படித்துக் கொண்டிருக்கும் போது தான் விஜிக்கு தெரிய வந்திருக்கிறது. அதற்குப்பின் சுரஜித்தை பார்த்த உடனே விஜிக்கு பிடித்து விட்டதாம். பின் இவர் சுரஜித்திடம் தன்னுடைய விருப்பத்தை சொல்லி இருக்கிறார். ஆனால், அவர் அப்போது எதுவுமே சொல்லவில்லை. அதற்குப்பின் ஒரு நாள் சென்னை வந்த சுரஜித் ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த விஜியை பார்த்து தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார். ஆனால், இவர் தன் காதலை சொல்வதற்காக பல மணி நேரம் அங்கு காத்திருந்தார்.

-விளம்பரம்-

சுரஜித் குமார் குறித்த தகவல்:

இதனால் விஜியின் தொழில் மீது சுஜீத்துக்கு கோபமும் , வெறுப்பும் வந்தது. பின் இரு வீட்டார் சம்மதத்துடன் 1969 ஆம் ஆண்டு சுரஜித்- விஜயலட்சுமி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு விஜி தன்னுடைய கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சுரஜித் வேளாண்மை அறிஞர் மட்டும் இல்லை வேளாண்மையில் புரட்சி செய்தவர். 60, 70 காலகட்டங்களில் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் வந்தது. இதனால் ஒரு ஹெக்டருக்கு 5 டன் அரிசி உற்பத்தி செய்யும் வகையில் IR 8 என்ற நெல் ரகத்தை கண்டுபிடித்தார்கள்.

சுரஜித்-விஜயலக்ஷ்மி குறித்த தகவல்:

அதில் நல்ல மகசூலையும் பெற முடியும் என்பதை நிரூபித்து பசுமைப் புரட்சியையும் செய்தார்கள். இதை செய்தவர்களில் முக்கியமானவர் தான் சுரஜித். மேலும், நடனத்தில் அதிக ஆர்வம் இருந்ததால் விஜயலட்சுமி தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் திருமணத்திற்கு பிறகு சுரஜித் உதவியுடன் கல்வியில் அதிக கவனம் செலுத்தி படித்து முடித்தார் விஜி. படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறி சி ஏ வரை படித்து வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். பின் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாளர் ஆய்வாளராகவும் விஜி பணியாற்றி இருந்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகை விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தை கவனிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய ஓய்வு நேரங்களில் அக்கவுண்டன்சி படிப்பையும் கற்றுக்கொண்டு வருகிறார்.

Advertisement