உங்க அப்பா அம்மா முன்னாடி இப்படி பண்ணுவீயா..? மஹத்தை கதகரவிட்ட மும்தாஜ்..!

0
368
mumtaj-bigg-boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் மஹத் வெளியேறி இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. மஹத் எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணமே அவர் இந்த வார டாஸ்கின் போது மும்தாஜ் மற்றும் டேனியிடம் அநாகரீகமாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்து கொண்ட விதம் தான்.

mahat

அதே போல மஹத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தான் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே யாஷிகாவிடம் செய்த எல்லை மீறிய செயல்கள் ஏராளம். இதற்கிடையே இவர்கள் இருவருக்கும் காதல் வேறு மலர்ந்துவிட்டதால் மஹத்துடனான காதலை முறித்துக்கொண்டார் மஹத்தின் முன்னாள் காதலி பிராச்சி.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் செய்த சில அநாகரீக செய்லகளை சுட்டி காட்டி இருந்தார் மும்தாஜ். நேற்று கமலிடம் பேசிக்கொண்டிருந்த மும்தாஜ், மஹத் பற்றி பேசிய போது “முதல் வாரம் மஹத்தை ஒரு தம்பி போல தான் பார்த்தேன்.போக போக அவர் செய்த தவறுகளை சுட்டி காட்டிய போது அது அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது.

bigg boss

அதே போல எங்கள் இஷ்டத்திற்கு சுதந்திரமாக இருப்போம் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.ஆனால்,ஒரு சமூகத்தில் அப்படி இருக்க முடியாது. உங்களுடைய படுக்கை சிறையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், சிறியவர், பெரியவர் இருக்கும் ஒரு இடத்தில் அவர்களுக்கு ஏற்றார் போல தான் நடக்க வேண்டும்.

உங்களுடைய அம்மா, அப்பா முன்பு இதுபோல நடக்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?.ஆனால், இந்த மாதிரி எங்க வீட்டில் நடக்காது. நான் படங்களில் புகைபிடிப்பது போல சில காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால், அதை எங்க வீட்டில் சின்ன பிள்ளைகள் பார்க்க நான் அனுமதித்து இல்லை. ஏனெனில் அதனை பார்த்து அவர்கள் கேட்டு போக கூடாது.” என்று மும்தாஜ் கூறி யிருந்தார்.