நன்றிக்கடன் மறக்காத விஜய்..! பிரபல நடிகருக்கு எழுதிய நெகிழ்ச்சி கடிதம்.! ஆதாரம் இதோ

0
249
vijay

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

vijay

இந்நிலையில் இளைய தளபதி விஜய் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி எழுதிய மடல் ஒன்றின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த மடலில் நடிகர் விஜய், உங்கள் அன்பிற்கு நான் அடிமை என்று விஜயகாந்தை குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் குடும்பத்திற்கும், நடிகர் விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் , நடிகர் விஜயகாந்தை ‘சட்டம் ஒரு இருட்டறை ‘ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பல்வேறு படங்களை இயக்கினார் எஸ் ஏ சந்திரசேகர்.

vijay

அதே போல நடிகர் விஜய் ‘நாளைய தீர்ப்பு ‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும், விஜய்க்கு திரைத்துறைக்கு ஒரு சிறந்த எண்ட்ரியாக அமைந்தது விஜய்காந்த் நடித்த ‘ செந்தூர பாண்டி ‘ என்ற படம் தான். அந்த நன்றியை மனதில் இன்று வரை வைத்துள்ளார் நடிகர் விஜய்.