மஹத் செய்த முகம் சுளிக்கவைத்த செயல்.! மும்தாஜ் உருவத்தை கிண்டல் செய்த பொன்னம்பலம்.!

0
170

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து வரும் பல அநாகரீக செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. சில போட்டியாளர்கள் செய்யும் வரம்பு மீறிய செயல்கள் சில பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. அதுபோல டாஸ்க் என்ற பெயரில் மஹத், மும்தாஜின் உருவத்தை கிண்டல் செய்த விதம் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Maahat

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘உன்னை போல் ஒருவன்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை போன்றே நடை, உடை, பாவனை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.இந்த டாஸ்கில் ரெட் டீம், ப்ளூ டீம் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சில தனிப்பட்ட டாஸ்க்குகளும் கொடுப்பட்டது.

இந்த டாஸ்கின் போது மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத், மும்தாஜின் உருவத்தை போன்றே இருக்க வேண்டும் என்பதற்காக தனது பின் இடுப்பிற்கு கீழே தலையணையை வைத்துக் கொண்டார். அதனை வைஷ்ணவி தான் மஹத்தின் இடுப்பின் கீழ் வைத்துவிட்டார். இந்த செயலை கண்ட போதே பார்வையாளர்களுக்கு மஹத் மீது எரிச்சலை ஏற்படுத்தியது.

மும்தாஜ் குண்டாக இருப்பதால் அவரது உருவத்தை கிண்டல் செய்யும் விதமாகவே மஹத் இதுபோன்ற கேவலமான விடயத்தை செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மஹத் மற்றும் பொன்னம்பலம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு இருந்து கொண்டிருந்த போது மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத்தை, பொன்னம்பலம் ‘கம்மியா சாப்பிடு முமோ பின்னாடி எப்படி பெருத்திருக்கு பாரு’ என்று கேவலமாக கமண்ட் செய்தார்.

Mahat

மஹத், மும்தாஜ்ஜின் உருவத்தை கிண்டல் செய்யும் வகையில் அப்படி ஆடை அணிந்திருந்ததை பார்த்துதான் பொன்னம்பலம் அப்படி கமண்ட் செய்தார். இதனால் மற்ற போட்டியாளர்களும் பொன்னம்பலம் கூறியதை கண்டித்தனர். இதற்கடுத்து மஹத், எதிரிணியினரை எரிச்சலூட்டுவதற்காக மற்ற போட்டியாளர்கள் முன்பு, தான் அணிந்திருந்த பேண்ட்டை கழற்றி மாற்றினார்.

மஹத், மும்தாஜை தான் கிண்டல் செய்கிறார் என்று புரிந்து கொண்ட ஜனனி, பொன்னம்பலம், பாலாஜி, ஆகியோர் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகம் சுழித்திருப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. பல கோடி பேர் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் மஹத் செய்த இந்த அநாகரீக செயலை கண்ட போது அவர் மீதுண்டான எரிச்சல் மேலும் அதிகரித்துள்ளது.