கேங்ஸ்டர் கை கொடுத்ததா? மகேந்திரனின் அமிகோ கேரேஜ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

0
555
- Advertisement -

இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் எழுதி, இயக்கி இருக்கும் படம் அமிகோ கேரேஜ். இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன், அதிரா ராஜ், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பாணியில் உருவாக்கி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் அமிகோ கேரேஜ் என்ற கார் செட் இருக்கிறது. இந்த கார் செட் ஏரியாவில் தான் ஹீரோ மகேந்திரன் இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே அமிகோ கேரேஜ் கார் செட்டில் இருக்கும் நபர்களுடன் பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இப்படி இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக அந்த கார் செட்டுக்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. பின் அந்த அமிகோ கேரேஜ் செட் ஓனர் ஜி எம் சுந்தரத்துக்கும் மகேந்திரனுக்கும் நல்ல உறவு ஏற்படுகிறது.

- Advertisement -

பள்ளிக்கூடத்தில் இருந்து கல்லூரி முடியும் வரை தினமும் அந்த கார் செட்டுக்கு சென்று பேசி வருவதை வழக்கமாக ஹீரோ வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒருநாள் ஹீரோவிற்கும் அந்த பகுதியில் இருக்கும் ரவுடிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் மகேந்திரனுடைய வாழ்க்கையே திசை மாறுகிறது. அதற்குப்பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பில்டப்பும் இல்லாத சாதாரண மிடில் கிளாஸ் பையனாக மகேந்திரன் நடித்திருக்கிறார்.

கல்லூரி மாணவனாக இவருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால், பள்ளி பருவத்தில் இவருடைய காட்சிகள் கொஞ்சம் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சண்டைக் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் மகேந்திரன் நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். இவரை அடுத்து ஹீரோயினியாக வரும் அதிரா ராஜ் எனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை என்றாலும் படம் முழுக்க வந்து செல்கிறார். இவர்களை அடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜி எம் சுந்தர் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை இயக்குனர் அவரை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். கேங்ஸ்டர் கதையை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் கையாண்டு இருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து ஒரு கேங்ஸ்டர் ஆக எப்படி மாறுகிறார் என்பதை இந்த படத்தில் இயக்குனர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஒருவர் செய்யும் தவறால் அவருடைய வாழ்க்கை எப்படி புரட்டிப் போடுகிறது என்ற ஒரு மெசேஜையும் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார்.

படத்திற்கு பாடல்கள் பெரியளவு இல்லை. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். தேவையில்லாத காட்சிகளை வெட்டி இருக்கலாம். இருந்தாலும், படம் மெதுவாகவே நகர்கிறது. இது மிகப்பெரிய குறை என்று சொல்லலாம். சின்ன சின்ன விஷயங்களை இயக்குனர் கவனத்தில் இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ரொம்ப ரொம்ப சுமாரான படம்.

நிறை:

மகேந்திரனின் நடிப்பு

ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

ஓரு தவறால் இளைஞர் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை இயக்குனர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

குறை:

கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம்

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

சில காட்சிகளை தவித்திருக்கலாம்

பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பக்க பலத்தை சேர்க்கவில்லை

ஆங்காங்கே நிறைய லாஜிக் குறைபாடுகள்

படம் மெதுவாகவே செல்கிறது

மொத்தத்தில் அமிகோ கேரேஜ்- சொதப்பல்

Advertisement