ஏசு நாதர் சாராயம் குடித்ததாக விஜய் ஆண்டனி பேசி பேச்சு சர்ச்சையான நிலையில் தற்போது தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரோமியோ.
இந்த படத்தில் மிர்னாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
செய்தியாளர்கள் கேள்வி:
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரோமியோ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்து கொண்ட பட குழுவினர் பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் நடிகர் விஜய் ஆண்டனி கொடுத்திருந்த பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அதாவது, ரோமியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாலும் பழத்துக்கு பதிலாக ஒரு பெண் சரக்கு ஊட்டுவது போல போஸ்டர் வந்துச்சு?
இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்கு விஜய் ஆண்டனி, இங்கு வந்திருப்பவர்களில் பாதி பேர் குடிப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதில் ஆண்- பெண் என்ற வேறுபாடலாம் பார்க்க வேண்டாம். குடி என்றால் எல்லோருக்குமே ஒன்று தான். ஆண்களுக்கு என்னெல்லாம் இருக்கிறதோ அதெல்லாம் அவர்களுக்கும் இருக்கும். அந்த மாதிரி தான் மது அருந்துவதும். ஆனால், நான் குடிப்பதை சரி என்று ஆதரிக்கவில்லை.
மது அருந்துவது குறித்து சொன்னது:
ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான். மேலும், குடி என்பது இப்போது உருவானதில்லை. இது ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. சாராயம் என்ற பெயரில் ஆரம்பத்த இந்த குடி தற்போது பாராக மாறி இருக்கிறது. அந்த காலத்தில் திராட்சை ரசம் என்ற பெயரில் இருந்தது. ஜீசஸ் கூட குடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி இருந்தது.
கிறிஸ்தவ சபை கண்டனம் :
இப்படி ஒரு நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்புர் தலைவர் லியோ ‘கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொது வெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்