500 கோடி வசூல் செய்ற படம்னாலும் இனி அப்படி நடிக்க மாட்டேன் – மாளவிகாவின் முடிவு. நெட்டிசன்களின் Reaction

0
1612
Malavika
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கி வரும் தங்களான் படத்தில் நடித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனன் ‘நான் சினிமா துறையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். அது ரூ.500 கோடி வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் அதில் நடிக்கப் போவதில்லை.

- Advertisement -

அந்தப் படம் பிரம்மாண்டமாக ஓடி வசூலை குவித்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். நான் சிறுவயது முதல் ரசித்து வளர்ந்த ஊர்வசி, ஷோபனா, கஜோல் உள்ளிட்ட நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தனர். அவர்கள் வழியிலேயே நானும் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மாளவிகா மோகனனின் இந்த பேட்டியை கண்ட நெட்டிசன்கள் பலர் ‘ம் செய்யலாம் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள் இதற்கு முக்கிய காரணம் மாளவிகா தமிழ் நடித்த படங்களில் அவரது நடிப்பு சுமாராக இருந்தது தான். மாளவிகா மோகனின் இதுவரை தமிழில் பேட்ட மாஸ்டர் மாறன் போன்ற மூன்று படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறார். முதல் இரண்டு படத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் படங்களில் நடித்தும் இவரால் அடுத்த அடுத்த படங்களில் கமிட்டாக முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்புதான்.

-விளம்பரம்-

மாஸ்டர் திரைப்படம் வெளியான போதே இவரது நடிப்பை கேலி செய்து பல்வேறு விதமானமீம்கள் சமூக வலைதளத்தில் ஆனது அதேபோல தனுஷின் மாறன் திரைப்படத்தில் இவர் வசனம் பேசியதை விட பபுள்கம்மை மென்று கொண்டு வாய் அசைத்துக் கொண்டு இருந்தது தான் அதிகம். இந்த படத்திலும் இவரது நடிப்பு பெரும் கேலிக்கு உள்ளானது. இப்படி அடுத்தடுத்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதால் தான் தற்போது மாளவிகா மோகனன் இப்படி ஒரு முடிவை மாணவிக்காக எடுத்துள்ளாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அதேபோல கடந்த ஆண்டு நடிகை மாளவிகா மோகன் பேட்டி ஒன்றில் நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற ஒரு மருத்துவமனை காட்சியில் நயன்தாரா மேக்கப் அணிந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி கேலி செய்யும் விதமாக பேசி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் வெறும் கிளாமரை மட்டும் நம்பிக் கொண்டு இருக்கும் நீங்கள் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்த நயன்தாராவின் நடிப்பை எல்லாம் விமர்சிக்கலாமா என்று கேலி செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் மாளவிகா மோகனின் இந்த விமர்சனத்திற்கு நயன்தாராவும் பேட்டி ஒன்றில் அதிரடி பதிலடி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷின் மாறன் திரைப்படத்திற்கு பின்னர் நடிகை மாளவிகா மோகனன் பல்வேறு கதைகளை கேட்டிருந்தாலும் பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் மட்டுமே கமிட்டாகி இருந்தார். இதற்காக சண்டை பயிற்சிகளை மேற்கொண்டதோடு இந்த படத்தில் ஒரு ஆதிவாசி பெண்ணாக நடிப்பதால் அதற்கு ஏற்றார் போல தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். பொதுவாக ரஞ்சித் படங்களில் ஹீரோவிற்கு நிகராக பெண் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் எனவே இந்த படத்திலாவது மாளவிகா மோகனன் தன்னுடைய நடிப்பு வெளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement