வணங்கான் திரைப்படத்திலிருந்து வெளியேறியது குறித்து நடிகை மமிதா பைஜு மீண்டும் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் வணங்கான் படம் குறித்த சர்ச்சை தான் அதிமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரித்தது.

பின் இந்த படத்தினுடைய சூட்டிங் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் திடீரென்று இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார். அதற்கு பிறகு தான் இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் கமிட் ஆகியிருந்தார். மேலும், சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் சூர்யாவை பாலா அடித்து விட்டதாகவும், இன்னும் வேறு தகவல்களையும் கூறியிருந்தார்கள். ஆனால், இது குறித்து பாலா- சூர்யா இருவருமே விளக்கம் கொடுக்கவில்லை.
வணங்கான் படம்:
தற்போது இந்த படத்தினுடைய இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வரவேற்பு பெற்று இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்த சர்ச்சை:
இந்த நிலையில் ஏற்கனவே வணங்கான் படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜு வெளியேறி இருந்தார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை மமிதா பைஜு, வணங்கான் படத்தில் முதலில் நான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆட வேண்டும். அப்போது நான் அதை கற்றுக் கொண்டிருந்தேன். திடீரென்று என்னை இயக்குனர் பாலா செய்து காட்டுங்கள் என்று கூறினார். அப்போது நான் தயாராகவில்லை. இதனால் பதற்றம் ஆகிவிட்டேன்.
#Vanangaan – Director Bala hits #Mamitha on the sets & she walked out of the project 😮😔pic.twitter.com/frTawoRmc7
— VCD (@VCDtweets) February 28, 2024
மமிதா பைஜு பேட்டி:
அந்த சமயம் எனக்கு பின்னாடி இருந்த பாலா என் தோள் பட்டையில் அடித்தார். பின் அவர், நான் அவ்வபோது திட்டுவேன் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று ஷெட்டிலிலேயே சொல்லிவிட்டார். சில சமயங்களில் அவரிடம் நான் அடி வாங்கி இருக்கிறேன். சூர்யா சார் ஏற்கனவே அவரோடு படம் பண்ணி இருந்தவர். அவர் எப்படி என அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். புதிதாக இணைந்ததால் எனக்கு தான் தெரியவில்லை என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி இணையத்தில் படு வைரலானதை தொடர்ந்து பலருமே பாலாவை விமர்சித்து பதிவிட்டார்கள்.

மமிதா பைஜு கொடுத்த விளக்கம்:
பின் இது தொடர்பாக நடிகை மமிதா பைஜு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு விளக்கப்பதிவை போட்டிருந்தார். அதில் அவர், என்னுடைய தமிழ் சினிமா அனுபவம் குறித்து இணையத்தில் வரும் பல செய்திகள் ஆதாரம் அற்றவை. ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்து உள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார். அந்த படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எந்தவித தவறான அனுபவங்களையும் நான் சந்திக்கவில்லை என்பதை நான் இந்த தருணத்தில் மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறேன். கமிட்மெண்டுகள் காரணமாகவே அந்த படத்தில் இருந்து நான் விலகி இருக்கிறேன். தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தார்.