பாக்கியராஜ் படத்தால் ஏற்பட்ட ஏமாற்றம், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பானுப்ரியா.

0
137
- Advertisement -

இயக்குனர் பாக்கியராஜால் தன்னுடைய பள்ளிப்படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்று நடிகை பானுப்ரியா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் 80- 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்திருந்தவர் பானுப்ரியா. இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். இவர் பரதநாட்டிய கலையை முறையாக கற்றவர். பின் இவர் 1983ஆம் ஆண்டு இயக்குனர் பாரதி வாசன் இயக்கத்தில் வெளிவந்த மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே இவருடைய எதார்த்தமான நடிப்பும், அழகும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார் மேலும், இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, மம்முட்டி போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

பானுபிரியா திரைப்பயணம்:

இவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகளீர் மட்டும்’ என்ற படத்திலும் பானுபிரியா நடித்திருந்தார். பின் பெரிதாக இவர் ஆர்வம் காட்டி நடிப்பதில்லை. காரணம்,சமீப காலமாகவே நடிகை பானுப்ரியா அவர்கள் தீவிர உடல் நலப் பிரச்சினையால் அவஸ்தைப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இவருக்கு ஞாபகம் குறைவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் பேசுவது மறந்து விடுவதால் படப்பிடிப்பு வாய்ப்புகளை நிராகரித்து வருகிறார்.

பானுபிரியா குறித்த தகவல்:

அதோடு ஒரு காலத்தில் சிக்கென ஒல்லியாக இருந்த நடிகை பானுபிரியா, பின்னர் வயதாகி உடல் எடை கூடி சற்று பருமனாக மாறிவிட்டார். தற்போது 52 வயதாகும் பானுபிரியா, பருமனாக இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் மாறி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதனையே நடிகை பானுப்பிரியா அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

பானுபிரியா குடும்பம்:

இவர்களுக்கு அபிநயா இந்த மகள் பிறந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து தன்னுடைய மகளுடன் பானுப்பிரியா சென்னைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய பள்ளி படிப்பு பாக்யராஜால் நின்றிருக்கும் தகவலை பானுப்பிரியா கூறியிருக்கிறார். அதாவது, மெல்ல பேசுங்கள் படத்திற்கு முன்பே இவர் இயக்குனர் பாக்கியராஜ் இயக்கிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக ஆட்டிசன் சென்றிருந்தார்.

பள்ளி படிப்பை நிறுத்திய காரணம்:

பாக்கியராஜ் அவருடைய நடிப்பை பார்த்து தன்னுடைய படத்தில் நடிக்க ஒப்புதல் செய்துவிட்டார். பின்னர் லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்த போது பானுப்பிரியா ரொம்ப இளமையாக இருந்திருந்தார். அப்போது அவருக்கு வெறும் 15 வயது தான். இதனால் இந்த படத்திற்கு அவருடைய தோற்றம் சரிப்பட்டு வராது என்று பானுப்பிரியாவை பாக்யராஜ் ரிஜெக்ட் செய்துவிட்டார். இன்னொரு பக்கம், பாக்யராஜ் படத்தில் நடிக்க போவது குறித்து பானுப்பிரியா பள்ளியில் தன்னுடன் படித்த அனைத்து மாணவர்களிடமும் கூறியிருந்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் போனது தெரிந்ததால் மாணவர்கள் பானுப்பிரியாவை கிண்டல் செய்வார்கள் என்று அந்த அவமானத்திலேயே பயந்து பானுபிரியா பள்ளிப்புக்கு போவதை நிறுத்தி இருக்கிறார்.

Advertisement