ஆளவந்தான் பட நடிகையை கைது செய்ய கோரி போலீசில் புகார்.

0
1441
raveena
- Advertisement -

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய அளவில் வெற்றியை கொடுத்த படம் ஆளவந்தான். இந்த படம் அப்ஹெ என்ற இந்தியில் மொழி தழுவல் படம். இந்த படத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றி கொண்டது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ரவீனா டாண்டன் மீது போலீசில் புகார் அளித்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Image result for raveena tandon arrest

- Advertisement -

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரவீனா டாண்டன். இவர் முன்னாள் மாடலும் ஆவார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு என்று பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை ரவீனா டாண்டன் மீதும் இயக்குனர் ஃபரா கான், நகைச்சுவை நடிகர் பார்தி சிங் ஆகியோரை கைது செய்ய எஸ்பிக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மகாராஷ்டிர மாநிலத்தில் டிஜிபிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் ஒரு நபர். அந்த நபர் பீட் நகரின் தனியார் தொண்டு அமைப்பை சேர்ந்த ஆஷிஸ் ஷிண்டே தான். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது, சமீபத்தில் ரவீணா, பார்தி, ஃபரா ஆகியோர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின்னும் இப்படி ஒரு கிளாமரான ஆடையில் தாழம்பூ சீரியல் நடிகை சாந்தினி.

அப்போது அவர்கள் மூவரும் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தும் படி பேசி உள்ளார்கள். மேலும், கடந்த டிசம்பர் மாதமே சிவாஜி நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பின் அந்த புகார் அவர்கள் மூவரும் வசிக்கும் பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. ஆனாலும், போலீஸ் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-

இது குறித்து தற்போது பீட் நகரில் உள்ள எஸ்.பி ஹர்ஷ் அவர்கள் கூறியது, இதுவரை எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு புகாரோ, கடிதமோ எதுவுமே வரவில்லை. இவர்கள் மூவர் குறித்து புகார் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாத புதிதிராகவே உள்ளது.

Advertisement