என்னது, அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு ஒரு நாளுக்கு இவ்வளவு செலவாகுதா ? – மாணிக்கம் தாகூர் சொன்ன தகவல்.

0
1280
- Advertisement -

அண்ணாமலையின் பாதயாத்திரை ஒரு நாளுக்கு ரூபாய் 1 கோடி வரை செலவு செய்யப்படுகிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். இது குறித்து கனகுக்களை அவர் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் நேற்று மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் பாதயாத்திரையை மேற்கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபி.யின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா. பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி .வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்கள்  வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

எம்.பியின் குற்றச்சாட்டு

அண்ணாமலையின் பாதயாத்திரை ஒரு நாளுக்கு ரூபாய் 1 கோடி வரை செலவு செய்யப்படுகிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். இது குறித்து கனகுக்களை அவர் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் நேற்று அளித்த பேட்டியில் நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் போன்று இனி தமிழகத்தில் நடைபெறாது. வெறுப்பு அரசியலின் மையமாக இருக்க கூடிய பல அமைப்புகள் இதில் குளிர்காய நினைக்கின்றனர்.

-விளம்பரம்-

வெறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் மத மற்றும் சாதிய அமைப்புகள் ஈடுபடுவதை அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதனை சரி செய்யும் வகையில் ஓய்வு பெற்ற அரசு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்திருப்பது வரவேற்க தக்கது. தமிழக பாஜக தலைவர் நடைபயனதிற்க்காக தினமும் 1 கோடிவரை செலவு செய்து வருகிறார். இதற்க்கான கணக்கு வழக்கை அவர் பொது வெளியில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். 9 வருடங்களாக பட்டாசு தொழிலை சீர்குலைத்த பாஜக அரசு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் சிவகாசி தத்தளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.         

Advertisement