ஆரம்பமாக போகிறது லொள்ளு சபா 2.! சந்தானத்திற்கு பதில் யார் தெரியுமா.!

0
1174
Lollu-Sabha-2
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடித்த சந்தானம், ஜீவா, டேனியல் அனி போப், மனோகர் போன்ற அனைவரும் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர். ஆனால், தற்போதும் லொள்ளு சபா விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Related image

ஓவர் செண்ட்டிமெண்ட் மற்றும் சண்டைக்காட்சிகளை நக்கலடித்து அதன் ஸ்பூப் வடிவமாக வெளியாகிக்கொண்டிருந்தத இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சியால் சில சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதிருப்தியடைந்து போலிஸில் புகார் அளிக்கும் அளவுக்கு சென்ற சம்பவங்களும் உண்டு. 

இதையும் படியுங்க : சொத்துக்காக தாயை கொடுமை செய்த சங்கீதா.! போலீஸ் நிலையத்தில் தாய் புகார்.! 

- Advertisement -

மேலும், லொள்ளு சபாவை முன்னோடியாக வைத்து தான் தமிழ் சினிமாவில் பல்வேறு ஸ்பூப் படங்கள் வந்தன. அவ்வளவு ஏன் சி எஸ் அமுதன் இயக்கத்தில் வெளியான ‘தமிழ் படம்’ கூட லொள்ளு சபாவை முன்னோடியாக வைத்தே எடுக்கபட்டது.

Related image

இந்த நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இம்முறை சந்தானம்நடித்த கதாபாத்திரங்களில் அமுதவாணன் நடிக்க இருப்பதாகவும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை இயக்கிய தாம்சன் இதை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹீரோயினாக மைனா நந்தினியும் நடிக்க உள்ளனர். இம்மாதம் இதற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இவர்கள் முதலில் ஸ்பூஃப் செய்ய இருக்கும் படம்  `விஸ்வாசம்’தானாம். 

-விளம்பரம்-
Advertisement