விஜய் டிவி உருவக் கேலிகளை எப்போது நிறுத்தும், மணிமேகலையை அசிங்கப்படுத்திய மைனாவின் மாமியார். ரசிகர்கள் கண்டனம்.

0
17785
manimegalai

தமிழ் தொலைக்காட்சியில் எவ்வளவோ சேனல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும் தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சேனல் விஜய் டிவி தான். தொலைக்காட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் சன் டிவி முதலில் இருந்தாலும் தற்போது சன் டிவியை முந்திக்கொண்டு விஜய் டிவி வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும், சீரியல்களும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து வருகிறது.

அதிலும் விஜய் டிவியில் புதிய புதிய நிகழ்ச்சியையும் சீரியல்களையும் தொகுத்து வழங்கி வருகிறது. மேலும், விஜய் டிவியில் எப்போதுமே புதிய புதிய நிகழ்ச்சிகள் வித்தியாசமான வகையில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், mr. & mrs. சின்னத்திரை என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ நெட்டிசன்கன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக ம க பா மற்றும் மணிமேகலை இருந்து வருகின்றனர். ஆரம்பத்தில் அர்ச்சனா தான் இதில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் மணிமேகலைக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பெண்களை இது போன்ற உருவ கேள்விகள் செய்வது புதிதான ஒரு விஷயம் கிடையாது. பிரியங்கா, கிரேஸ் போன்ற பல்வேறு தொகுப்பாளர்களை விஜய் டிவியை சேர்ந்தவர்களே பலமுறை நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலி செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தீபா உருவ கேலி செய்வது குறித்து பேசியது பலரின் பாராட்டைப் பெற்றது. ஆனால், நிகழ்ச்சியை கண்ட பின்னரே அது பிராங் என்று தெரிந்ததும் பலரும் ஆப்செட் அடைந்தார்கள். இப்படி ஒரு நிலையில் பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை உருவக் கேலிக்கு கேள்விக்கு உள்ளாகி இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி இருந்த இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் மணிமேகலையை யோகேஷ்ஷின் அம்மா, உருவக் கேலி செய்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ பலரும் உருவக் கேலிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட் தான் என்ற போதிலும் மணிமேகலை இதுமாதிரியான நகைச்சுவைகளை ஏற்கக் கூடாது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement