ஆர்.எஸ்.எஸ்.காரர் ஜெயமோகனைத் கோபமூட்டியதில் ஆச்சரியமில்லை – பதிலடி கொடுத்த மஞ்சுமேல் பாய்ஸ் இயக்குனரின் தந்தை.

0
398
- Advertisement -

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும்  ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தை கேரள குடிப்பொறுக்கிகள் என்று கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்த படத்தின் இயக்குனரின் தந்தை கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. இதனால் மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்த படம் பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மஞ்சுமேல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

- Advertisement -

மஞ்சுமேல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சுமேல் பாய்ஸ் படம் எனக்கு எரிச்சலை ஊட்டுகிறது. அதில் காட்டுவது புனைவு கிடையாது. தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது. குடி குடி குடி என்று விழுந்து கிடப்பது, அத்துமீறுவது தவிர வேறு எதிலும் ஆர்வமில்லை. எந்த பொது நாகரிகமும் கிடையாது. இந்த மலையாள பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது.

ஆனால், அவர்கள் மொழி மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று தெனாவெட்டு இருக்கும். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகள் கால் அழுகி இருக்கின்றது. இப்படத்தினை கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள் என்றெல்லாம் படத்தை விமர்சித்தும், மலையாள மொழி மக்களை விமர்சித்தும் பேசியிருந்தார்.இது மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒருநிலையில் ஜெயமோகனுக்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குனர் சிதம்பரத்தின் தந்தை சதீஷ் ‘படம் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஜெயமோகனைத் கோபமூட்டியதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று என் அன்பு நண்பர் ஓ.கே. ஜானி தான் கூறினார். அது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஓவியர்கள் அல்லது மீன் வெட்டும் சாதாரண மனிதர்கள். ஆறாம் அதிபதி பரம்பரையில் யாரும் இல்லை சரம் இல்லை.

தொழிலாளர்களுக்கு இடையே உள்ள உறவை சிதம்பரம் காட்டியது. அது சங் பரிவாரங்களுடன் சரியாக நடக்காததில் ஆச்சரியமில்லை. ஆனால், அவர்கள் புளிச்சேரி குடித்துக்கொண்டிருக்கும் ஆறாம் அதிபதிக்கு வீழ்பவர்கள் அல்ல. நட்புதான் அதன் சாராம்சம். ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரரை கோபமூட்டியதற்காக சிதம்பரத்திற்கு ஒரு பெரிய சல்யூட்.” என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement