கெத்தா இருந்த இவரை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு – ராதாரவியின் வீடியோவை கண்டு கலங்கிய ரசிகர்கள்.

0
570
Radharavi
- Advertisement -

டப்பிங் யூனியன் தேர்தலுக்கு நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு ராதாரவி வந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்து இருந்தார்கள். இதில் ராதாரவியும், நீண்ட நாள் டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருப்பவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், ராஜேந்திரனுக்கு யூனியன் உறுப்பினர்கள் மத்தியில் நிறைய செல்வாக்கு இருப்பதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. பின் ராஜேந்திரன் பேட்டியில், நான் அண்ணன் ராதாரவியை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடாததை பயன்படுத்தி பொறுப்பில்லாத சில பேர் இந்த பதவிக்கு வர முயற்சி செய்தார்கள். இதனால் நான் தலைவர் பதவியில் போட்டியிட தயாரானேன். ஆனால், அந்த சிலருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

டப்பிங் யூனியன் தேர்தல்:

நான் வெற்றி பெற்றால் டப்பிங் யூனியன் கட்டிடம், வரவு செலவு பிரச்சனை குறித்து நல்ல முடிவு எடுப்பேன் என்று கூறி இருந்தார். இவரை தொடர்ந்து ராதாரவி பேட்டி கொடுத்து இருந்தார். அதில் சின்மயி விவகாரம் தான் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. இப்படி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இதனால் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த டப்பிங் யூனியன் தேர்தல் இன்று நடைபெற்றிருக்கிறது.

ராதாரவி வீடியோ:

இதில் பிரபலங்கள் பலருமே வாக்களித்து இருக்கிறார்கள். மேலும், தேர்தலில் வாக்களிக்க நடிகர் ராதாரவி அவர்கள் நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடந்து வந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் என்ன ஆச்சு? என்ன பிரச்சனை ? என்றெல்லாம் கேட்டிருக்காங்க. இன்னும் சிலர், உடம்பு முடியாத நிலையில் தலைவர் பதவி தேவையா? என்றெல்லாம் விமர்சித்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-

ராதாரவி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ராதாரவி. இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறார். இவர் 40 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் சமீப காலங்களில் சின்னத்திரை நிகழ்ச்சிகள், சீரியல்கள், மேடை பேச்சுக்கள் என பங்கேற்று வருகிறார். இவர் தீவிர அரசியல்வாதியும் ஆவார். அதோடு இவர் தென்னிந்திய சினிமாவின் நடிகர் சங்க தலைவராக இருந்து வந்தார்.

ராதாரவி குடும்பம்:

மேலும், இவரது தந்தை பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனாவார். அதே போல இவரின் சகோதரி தான் ராதிகா. இவரும் சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் இவர் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

Advertisement