ஜி.பி.முத்துக்கு எல்லாம் வாய்ப்பு தரத பாக்கும் போது – வேதனையை பகிர்ந்த மன்ஜிமோல் பாய்ஸ் நடிகர்.

0
780
- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நடிகர் விஜயமுது அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே மஞ்சுமெல் பாய்ஸ் படம் குறித்து தான். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார்.

- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதை படத்தின் கதை. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. தற்போது திரையரங்கு எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக சக்கை போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது.

படம் குறித்த விமர்சனம்:

மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது. பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கமலஹாசனை படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் பட குழுவினர் நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்று போட்டோ எடுத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நடிகர் விஜயமுது பேட்டி:

இவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் மஞ்சு மேல் பாய்ஸ் படத்தை பார்த்து பாராட்டி பதிவு போட்டு இருக்கிறார். மேலும், இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் விஜயமுது. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜயமுது பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் படத்தைப் பார்ப்பதற்கு டிக்கெட் வாங்க கூட முடியாது அளவிற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன். சினிமாவில் நடித்த கலைஞனான நான் வறுமையில் அந்த அளவிற்கு வாடி இருந்தேன்.

தமிழ் சினிமா குறித்து சொன்னது:

இப்ப வந்திருக்கும் ஜி பி முத்து போன்ற பல பேருக்கு வாய்ப்பு தந்து அவர்கள் கேட்கும் அளவிற்கு சம்பளமும் கொடுக்கிறார்கள். எங்களைப் போன்று அடிமட்டத்திலிருந்து வந்தவர்களை மதிக்க மாட்டார்கள். வாய்ப்பு கேட்டு போனால் அதே துறையில் நீடித்துக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஏன் இந்த நிலைமை என்றும் புரியவில்லை? தயவுசெய்து இந்த நிலைமையை மாற்றுங்கள். புதிதாக வந்தவர்களுக்கு கொடும் வாய்ப்பில் கொஞ்சமாவது எங்களைப் போன்ற நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement