கெளதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடித்துள்ள ‘ஜோஸ்வா’ எப்படி – இதோ விமர்சனம்.

0
411
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். தற்போது இவர் எழுதி, இயக்கத்தில் உருவாகி இருக்கும் இடம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்த படம் ஆக்சன் திரல்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வருண், கிருஷ்ணா, யோகி பாபு, ராஹோ, மன்சூர் அலிகான், விசித்ரா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஜோஸ்வா ஒரு ஒப்பந்த கொலையாளியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் குந்தவை நியாயத்துக்காக போராடும் நபராக இருக்கிறார். இவரை பார்த்தவனுடன் ஜோஸ்வா காதலில் இருக்கிறார். அதோடு தான் செய்யும் கொலையாளி தொழிலை விடும் அளவிற்கு காதலிக்கிறார். அதேசமயம் அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு மெக்சிகன் போதை பொருள் கடத்தல் தலைவருக்கு எதிரான ஒரு முக்கியமான வழக்கை குந்தவி கையாளுகிறார்.

- Advertisement -

இதனால் போதைப் பொருள் கடத்தல் கும்பல் குந்தவியை கொலை செய்ய முயற்சி செய்கிறது. இதை அறிந்து ஜோஸ்வா அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். இறுதியில் ஜோஸ்வா குந்தவியை காப்பாற்றினாரா? ஜோஸ்வா எதற்காக கொலையாளி ஆகிறார்? ஜோஸ்வாவின் காதலை குந்தவி புரிந்து கொண்டாரா ? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஜோஸ்வா கதாபாத்திரத்தில் வருண், குந்தவி கதாபாத்திரத்தில் ராஹோ நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் ஆக்சன் மட்டும் இல்லாமல் காதல் காட்சிகளையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். ஆனால், சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காதல் காட்சிகள் எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அதேபோல் ஸ்டண்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தரமாக செய்து இருக்கலாம். மொத்தத்தில் வியப்படைய வைக்கும் அளவிற்கு சண்டை காட்சிகளும் இல்லை.
படத்தில் நிறைய தேவையற்ற காட்சிகள் இருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு கதாநாயகியின் கண்களை மையமாக வைத்து ஹீரோ பேசுவதனால் டைட்டில் இப்படி வைத்திருக்கலாம் போல இருக்கிறது. அரைத்த மாவை தான் இந்த படத்திலும் இயக்குனர் அரைத்து இருக்கிறார். படத்தில் புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் காண்பிக்கவில்லை. மொத்தத்தில் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் ரொம்ப ரொம்ப சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

ஆக்சன், காதல் காட்சிகள் சுமார்

பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் ஒன்றுமில்லை.

குறை:

இயக்குனர் கதையைக் கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்

தேவையில்லாத சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்

காதல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

பாடல்கள் செட்டாகவில்லை

சில நடிகர்களின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் ஜோஸ்வா இமைப் போல் காக்க- தவறவிட்டது

Advertisement