ஹன்சிகாவை காதலிப்பதாக கூறிவந்த டவிட்டர் நாயகன் மண்ணை சாதிக் கைது. ஏன் தெரியுமா?

0
1864
mannai-sathik
- Advertisement -

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களின் மூலம் தான் இவர் பிரபலமானார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். மேலும், இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவார். மேலும், தன்னை தானே காதல் மன்னன், டுவிட்டர் நாயகன் என்று சுய தப்பட்டம் அடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-
Image result for மண்ணை சாதிக்

- Advertisement -

அது மட்டுமல்லாமல் இவர் ஹன்சிகாவை காதலிப்பதாக கூறியும் அடிக்கடி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வகையில் இவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் படத்தை பதிவிட்டு, தனது படத்தையும் இணைத்து வெளியிட்டு அதில் அவர் தவறாக சித்தரித்து இருக்கிறார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இதை அறிந்த மன்னார்குடி பாஜக நகர செயலாளர் ரகுமான் அவர்கள் துணை நடிகர் சாதிக் பாஷா மீது போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து மன்னார்குடி நகர காவல் துறையினர் துணை நடிகர் சாதிக் பாஷாவை கைது செய்தனர். பின் 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்று மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறாக போட்டோ வெளியிட்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாஜாக உறுப்பினர்கள் எல்லாம் கடும் கோபத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for மண்ணை சாதிக்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். பின்னர் இவர் கடந்த ஆண்டு தான் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பேற்றார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து உள்ளார்.

இவர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து முடித்தார். இவரது கணவர் சௌந்தரராஜன் அவர்களும் மருத்துவர். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார்.மேலும், இவர் தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார்.

Advertisement