பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துவந்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘மாஸ்டர்’ படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளி வந்துகொண்டு இருக்கிறது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கார்.
விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் . இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துஉள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் 129 நாட்களில் முடிந்ததாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் மார்ச் மாசம் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (மார்ச் 14) வெளியாகி இருந்தது மேலும், அந்த பாடலின் டைட்டில் ‘Raid’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் போது விஜய்க்கு வருமான வரி துறை சோதனை நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற IT ரெய்டில் விஜய் சரியாக வருமான வரி செலுத்தி இருக்கிறார் என்று அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க மாஸ்டர் இசை வெளியிட்டு விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். ஏனென்றால் சமீப காலமாக விஜய் படங்கள் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. பிகில் படம் விழாவில் பாஸ் இருந்தும் ரசிகர்கள் சிலர் உள்ளே அனுமதிக்கபடாததால் மோதல் ஏற்பட்டு போலீசார் லேசான தடியடி நடத்திய சம்பவம், மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்த வருமான வரி சோதனை, போலீசார் மற்றும் அரசிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்கள், கரோனா வைரஸ் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மனதில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக படக்குழுவினர் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.