இளையராஜா செய்த செயலை நினைத்து சூப்பர் சிங்கர் மேடையில் கண்ணீர் விட்டு அழுத மனோ.

0
418
- Advertisement -

இளையராஜா குறித்து கண்கலங்கி பாடகர் மனோ பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடகர் மனோ. இவரின் இயற்பெயர் நாகூர் பாபு. இவர் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி என்ற இடத்தில் பிறந்தவர் ஆவார். இவரின் தந்தை ரசூல் ஆல் இந்தியா ரேடியோவில் மியூசிசியன் ஆக பணிபுரிந்தவர். தாய் ஷகிதா ஆந்திராவில் அந்தகாலத்தில் பாப்புலரான மேடை நடிகை ஆவார்.

-விளம்பரம்-

முதலில் மனோ 1970ம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரம் நடிக்க ஆரம்பித்தார். பின் இவர் சிறு வயதிலேயே கர்நாட்டிக் உள்ளிட்ட இசைகளை கற்று தேர்ந்தார். அதனை அடுத்து இவர் ஃபாஸில் இயக்கத்தில் வந்த பூவிழி வாசலிலே என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். சொல்லப்போனால், தமிழில் இளையராஜா தான் இவரை அறிமுகப்படுத்தினார். நாகூர் பாபு என்ற பெயரை மனோ என மாற்றியவரும் இளையராஜாதான்.

- Advertisement -

பாடகர் மனோ திரைப்பயணம்:

பிறகு அவரின் அண்ணே அண்ணே, தேன்மொழி, மதுர மரிக்கொழுந்து வாசம் உள்ளிட்ட பாடல்கள் தான் மனோவை பிரபலம் ஆக்கியது. பல பாடல்களை குரல் மாற்றி பாடுவதில் வல்லவரான மனோ இந்திரன் சந்திரன் படத்தில் இடம்பெற்ற அடிச்சுது கொட்டம் என்ற பாடலை குரல் மாற்றி கர கர குரலில் கஷ்டப்பட்டு பாடி ஒரு வாரம் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு கிடந்தார். அந்த அளவிற்கு இசை கலையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர். மேலும், இவர் பாடகர் மட்டுமல்லாது டப்பிங் கலைஞரும் ஆவார்.

மனோகர் குறித்த தகவல்:

குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் படங்கள் தெலுங்கில் வெளியாகும்போதெல்லாம் அவருக்காக தெலுங்கில் டப்பிங் பேசியவர் மனோ தான். அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்மந்தம் படங்களில் மட்டும் மனோ டப்பிங் பேசியிருப்பார். பல தமிழ் படங்களில் மனோ நடிக்கவும் செய்து இருக்கிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சி:

இதுவரை இவர் 35 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 3000 மேற்பட்ட இசைக்கச்சேரிகளை நடத்திருக்கிறார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் நடுவராகவும் பணிபுரிந்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மனோ இடையில் சில சீசன்கள் வரவில்லை. தற்போது இவர் சூப்பர் சிங்கர் 10ல் மீண்டும் நடுவராக இருக்கிறார்.

மனோ பேசிய வீடியோ:

இப்படி 40 ஆண்டு காலமாக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் பாடகர் மனோ. இந்நிலையில் பாடகர் மனோவை கௌரவிக்கும் வகையில் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஸ்பெஷலாக நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் இளையராஜா குறித்து மனோக கூறியது, எனக்கு இசை பிச்சை போட்டவர் இசைஞானி இளையராஜா தான் என்று கண் கலங்கி பேசியிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement