சேட்டன்கள் படத்தை தூக்கிவிட்ட தமிழர்கள் – மஞ்சிமேல் பாய்ஸ் படத்தின் தமிழ்நாட்டு வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா?

0
160
- Advertisement -

தமிழகத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் படம் வசூல் செய்திருக்கும் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். அதோடு இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது.

- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

இந்த படம் திரையிடப்பட்ட திரையரங்கில் எல்லாம் ஹவுஸ்புல் காட்ச்சிகளாகவே இருக்கின்றது. அந்த அளவிற்கு மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கை போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா.

குணா படம்:

இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அதுவும் கமலஹாசனின் குணா படத்தில் ஒரு குகை வரும். அதனால் தான் இந்த இடத்திற்கு குணா குகை என்று பெயர் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த குணா குகையை கண்டுபிடிக்க கமலஹாசன் கொஞ்சம் நஞ்சம் கஷ்டப்பட்டது கிடையாது.

-விளம்பரம்-

இப்படி சோசியல் மீடியா முழுவதும் அதிகமாக பேசப்படும் மஞ்சும்மேல் பாய்ஸ் படம் தென்னிந்தியளவில் நல்ல விமர்சனத்தை தாண்டி வசூலையும் பெற்று வருகிறது. பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தின் தமிழக வசூல் குறித்த செய்திகள் தான் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டின் வசூல் விவரம்:

அதாவது, மஞ்சும்மேல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. ஒரு மலையாள திரைப்படம் கேரளாவில் தாண்டி தமிழகத்தில் இந்த அளவிற்கு வசூல் செய்வது மிகப்பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று கூறுகிறார்கள்.

Advertisement