நான் நாலு மணி நேரம் டைம் தரேன் – திரிஷா விவகாரத்தில் கெடு கொடுத்த மன்சூர் அலிகான்.

0
117
- Advertisement -

நடிகை திரிஷா குறித்த சர்ச்சைக்கு மன்சூர் அலிகான் கொடுத்திருக்கும் விளக்க பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மன்சூர் அலிகான். தற்போது சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை.

-விளம்பரம்-

படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறார். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது குறித்து திரிஷா, ‘நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன்.

- Advertisement -

அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு’ என்று ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார். இவரை அடுத்து மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை கூறி வருகின்றனர்.

மன்சூர் அலிகான் பேட்டி:

மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து மன்சூர் அலிகான் கூறியிருப்பது, நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே அவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். மக்களுக்கு நான் யார் என்று நன்றாகவே தெரியும். பாஜகவை சேர்ந்த எஸ்வி சேகர் பெண்களைப் பற்றி ரொம்ப தவறாக பேசினார். அது தொடர்பாக அவர் மீது எந்த ஒரு கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை.

-விளம்பரம்-

நடிகர் சங்கம் குறித்து சொன்னது:

நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருந்தபோது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை. மேலும், நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை 4:00 மணி நேரத்திலேயே உடனடியாக திரும்ப பெற வேண்டும். என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். எல்லோரையும் உசுப்பேத்தி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இந்த விவகாரம் பற்றி எதுவுமே தெரியாது. நடிகை திரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை. திரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்.

திரிஷா குறித்து சொன்னது:

அதேபோல ஏற்கனவே நான் திரிஷா மீது தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை. அப்படி என்னால் பேச முடியாது. நான் என்னுடைய படத்தை இன்னும் பத்து நாட்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறேன். அதேபோல பிரபல அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலிலும் ஈடுபட இருக்கிறேன். இதனால் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்கு யாரோ சிலர் திட்டமிட்டு நான் தவறாக பேசியது போல சித்தரித்து எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement