படுக்கை அறை- முத்த காட்சிகள் குறித்து நெட்டிசன்கள் விமர்சிப்பதற்கு நடிகை தமன்னா கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.
அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.
தமன்னா திரைப்பயணம்:
சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலமாகவே தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2:
தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இவர் ஜீ கர்தா என்ற தொடரிலும் நடித்திருக்கிறார். தற்போது தமன்னா அவர்கள் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் விஜய் வர்மா, கஜோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த வெப் தொடர் ஜுன் 29ந் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது இந்த வெப் தொடருக்கான ப்ரொமோஷன் பணிகளில் மும்முரமாக தமன்னா ஈடுபட்டு வருகிறார். மேலும்,இந்த வெப் தொடரில் தமன்னா ரொம்ப கவர்ச்சியாகவும், படுகை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது.
ரசிகர்கள் விமர்சனம்:
நெட்டிசன்கள் பலரும் தமன்னாவை விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் திரையுலகில் எந்த சூழ்நிலையிலும் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தமன்னா 2016ல் கூறியிருந்தார். தற்போது அதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை தமன்னா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், 2023ல் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்? என்னைப் பற்றி கேலி,விமர்சனம் செய்பவர்களை ட்விட்டர் மாகாக்கள். ஹீரோக்கள் வீண் பேச்சு ரொமான்ஸ் பேசினாலும் சூப்பர் ஸ்டார் ஆகி விடுகிறார்கள். ஆனால். ஒரு பொண்ணு அப்படி நடித்தால் அவளுடைய கேரக்டரை மதிப்பிடுவார்கள். ஏன் என்று எனக்கு புரியவில்லை? என்னுடைய 18 வருட திரைத்துறையில் முத்தமிட்டதில்லை. ஆனால், ஒரு நடிகையாக நான் ஏன் விதிகளை போட வேண்டும் என்று யோசித்தேன்.
தமன்னா கொடுத்த பதிலடி:
நான் ஏன் நடிகையாக மேலும் வளரக்கூடாது என்று என்னை நானே கேட்டபோது தான் முத்த காட்சி பற்றிய விதி எனக்கு அர்த்தமற்றது என்று புரிந்தது. அதனால்தான் என்னுடைய அந்த விதியை மீறினேன். அது மட்டும் இல்லாமல் என்னுடைய காதலர் விஜய் வர்மா இந்த சமூகத்தை நன்கு அறிந்தவர். இந்த மாதிரியான சர்ச்சைகளை எல்லாம் இப்போது யாரும் பார்ப்பதில்லை. அது அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்தது. செக்ஸ் பத்தி பேசுவதை முட்டாள்தனமாக நினைக்கிறேன். அதை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு மனிதனுடைய அனைத்து தேவைகளைப் போலவே அதுவும் ஒன்று தான் என்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமன்னா கூறி இருக்கிறார்.