பன்னிக்கு நஷ்ட கணக்கு சொன்னவர் – அமீர் விவகாரம் குறித்து ஞானவேல் அதிரடி பேட்டி.

0
328
- Advertisement -

அமீர்- பருத்திவீரன் பஞ்சாயத்து குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் அமீர்.

-விளம்பரம்-

இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது. அதோடு இவர் படங்களில் நடித்தும் வருகிறார். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார். தற்போது அமீர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாயவலை. இந்த படத்தை அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

அமீர் சர்ச்சை:

இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கி இருக்கிறார். வின்சென்ட் அசோகன், சஞ்சனா ஷெட்டி, சரண், வின்சென்ட் சத்யா உட்பட பல பேர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய பல இயக்குனர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் இது குறித்து பேட்டியில் அமீர், நான் கொஞ்சம் கோபக்காரன், சுய மரியாதையுடன் வாழ்பவன். அதனால் தான் நான் சூர்யாவிடம் இருந்து ஒதுங்கி விட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை.

அமீர் செலுத்திய குற்றச்சாட்டு:

அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார். அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை. இப்போது நான் நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இயக்குனர் அமீர் அளித்திருந்த பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி:

இந்நிலையில் தன்மீது அமீர் செலுத்திய குற்றச்சாட்டிற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நந்தா படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா- அமீர் இடையே நட்பு ஏற்பட்டது. அதனால்தான் அமீருக்காக மௌனம் பேசியதே படத்தில் சூர்யா நடித்து கொடுத்தார். ஆனால், அமீர் இயக்குனரானதும் பேச்சில் மாற்றம் தெரிந்தது. இதனால் சூர்யா மௌனம் பேசியதே இசை வெளியீட்டு விழா கூட வரவில்லை. அதேபோல் பருத்திவீரன் படத்தை நானாக தயாரிக்கவில்லை. அதுவும் அமீருக்காக தான். அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார்.

அமீர் குறித்து சொன்னது:

அப்போது கூட அமீர் மீது கார்த்திக்கு நம்பிக்கையே இல்லை. நானும் சூர்யாவும் சேர்ந்துதான் பருத்திவீரன் கதையை கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று கார்த்தி இடம் சொல்லி புரிய வைத்தோம். அதேபோல் சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். அப்போது அமீர் பருத்திவீரன் எடுத்த பட்ஜெட்டில் 4 படங்களை தயாரித்திருக்கலாம். இப்போதும் அவர் சொன்னால் எத்தனை பேர் முன்னிலையிலும் பருத்திவீரன் பிரச்சனை குறித்து நான் பேச தயார். இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என சிவகுமாரன் நினைத்தார். ஆனால் அவரையும் இந்த பிரச்சனையில் இழுத்து விட்டார். இது நியாயமே கிடையாது. அவர் தன்னை இயக்குனர் பாரதிராஜா போல் நினைத்து இருக்கிறார். அவருக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. இனி அமீர் இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டே இருந்தால் நானும் விடமாட்டேன் பதிலடி கொடுப்பேன் என்று கோபமாக கொந்தளித்து பேசி இருக்கிறார்.

Advertisement