சென்னை போனா தான் நான் இயக்குனர். ஆனால் இங்கு – தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மாரி வேற மாரி பதிலடி.

0
623
Mari
- Advertisement -

உதயநிதியுடன் இனைந்து களப்பணியை மேற்கொண்டதால் எழுந்த விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்து இருக்கிறார். கடந்த சில வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டுஇருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், வெளிவர முடியாத சுழலில் ஏற்பட்டது. சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுது. இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நிலையில் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 16 ஆம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து பொய்த்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது..

- Advertisement -

இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த கனமழை குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது.

ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

-விளம்பரம்-

இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிகளிலும் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார்.இந்த நிலையில் அரசு மேற்கொள்ளும் மீட்பு பணியில் எப்படி ஒரு சினிமா இயக்குனர் இடம்பெறலாம் என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

மாரி செல்வராஜ் பேட்டி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் ‘இது என் ஊர், என் மக்கள், அண்ணே அம்மாவ காணும், அண்ணே எங்க அப்பாவ காணும், அண்ணே என்னை காப்பாத்துங்கன்னு போன் பண்ணி மொத்த ஊரும் காதறும் போது என்னால் என்ன செய்ய முடியுமோ ஓடி வந்து செஞ்சிகிட்டு இருக்கேன். அதெல்லாம் உணர்ந்தால் தான் புரியும். மீண்டும் சென்னை போனால் தான் நான் இயக்குனர் அதுவரை இந்த ஊரில் ஒருத்தன் தான் நான்.

என்னுடைய கதறலை கேட்டதும்

இந்த மக்கள் என்னை நம்புவது தான் என்னோட பலம் அதுக்காகவாவது நான் ஏதாவது செய்ய வேண்டும் களத்தில் நான் இருந்தேன் அமைச்சர் உதயநிதி சாருக்கு நான் கால் பண்ணி கூப்பிட்டேன். அவர் என்னுடைய கதறலை கேட்டதும் சேலத்தில் இருந்து உடனே கிளம்பி வந்து தேவையானவற்றை செய்தார். எங்களுக்கு தேவையான உதவிகளும் உடனுக்குடன் கிடைத்தது’ என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.

Advertisement