நீலமாக மாறிய கருப்பி,மாரி மனதிற்குள் நடந்த வண்ணமாற்றம் – மாரிசெல்வராஜ் உருவான கதை 

0
1820
Mari
- Advertisement -

படங்களில் விலங்குகளை பயன்படுத்தியதற்கு காரணம் இதுதான் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். பின் இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்தப் படத்தை பா ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்த படத்தில் கதிர், ரஞ்சித் யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, விஜயன், கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

- Advertisement -

மாமன்னன் படம்:

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. மேலும், இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

மாரி செல்வராஜ் படம் குறித்த விவரம்:

இப்படி இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் விலங்குகளை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பரியேறும் பெருமாள் படத்தில் இவர் கறுப்பி என்ற நாய், கர்ணனில் குதிரை, யானை, கழுதை போன்ற பல மிருகங்களை பயன்படுத்தியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் படத்தில் விலங்குகளை பயன்படுத்திய காரணம் குறித்து மாரி செல்வராஜ் கூறியிருந்தது, பரியேறும் பெருமாள் படத்தில் வரும் கருப்பி என்ற நாய் முதலில் படம் முழுவதும் வருவது கிடையாது. கதைப்படி கறுப்பி இறந்துவிடும். ஆனால், என்னால் அதை அப்படியே விட்டுவிட முடியவில்லை.

-விளம்பரம்-

கருப்பி குறித்து சொன்னது:

அந்த சீனை எடுத்துவிட்டு எடிட் செய்த பார்த்தபோது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் அந்த நாயை தினமும் படப்பிடிப்புக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் குழப்பமாக இருந்தது. படத்தில் தான் நாய் இறந்து விட்டதே! எதற்காக இவர் தினமும் அந்த நாயை படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டுவர சொல்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால், நான் படப்பிடிப்பில் சும்மா இருக்கும் நேரம் எல்லாம் நாயை வைத்து ஷாட்களை எடுத்துக் கொண்டே இருப்பேன். ஆனால், கிளைமாக்ஸில் நாய் மீண்டும் எழுகிறது என்பதை நான் படப்பிடிப்பு இறுதியில் தான் முடிவு செய்தேன்.

படத்தில் விலங்கு பயன்படுத்திய காரணம்:

நாயை நான் எடுக்க எடுக்க கருப்பியும் பரியனும் ஒன்றுதான் என்பது எனக்கு புரிந்தது. இறுதியில் கருப்பி வந்து பரியனை எழுப்புவது போன்ற காட்சி எடுத்தேன். என்னை சுற்றி இருந்தவர்கள் இது சினிமா தனமாக இருக்காதா? என்றெல்லாம் கேட்டார்கள். எப்படி இறந்த நாய் வரும் என்று கேட்டார்கள். நான் எமோஷனலாக உண்மையாக இருந்தால் அது ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்லி தான் எடுத்தேன். பலரும் இது குறித்து பல கேள்விகளை என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின் நான் நாயின் வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி முழுவதுமாக நீளமாக மாற்றினேன். அதனால் படத்தில் அது நீளமாக மாறும். என்னுடைய சினிமாவையே நான் அங்கு தான் கண்டுபிடித்தேன். எந்த மாதிரியான படங்களை எடுக்கலாம் என்று இதன் மூலம் தான் நான் கண்டுபிடித்தேன். எழுத்துக்கும் இயக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் நான் உணர்ந்தேன். இதையே என்னுடைய அடுத்த படமான கர்ணனில் தொடர்ந்தேன் என்று கூறியிருந்தார்.

Advertisement