50, 60 கோடி சம்பளம் வாங்குறாங்க,ஆனா நடிகர் சங்கமே துருபுடிச்சி கிடக்கு – வறுத்தெடுத்த மன்சூர் அலிகான்

0
2136
- Advertisement -

நடிகர் சங்கம் குறித்து மன்சூர் அலிகான் கூறியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இயக்குனர் ஆனந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

லியோ படம்:

இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை ராபின்சன் தயாரித்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய்யை வைத்து இயக்கும் “லியோ” என்ற படத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

நடிகர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி:

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் தி.நகர் சர் பி.டி. தியாகராஜா மகாலில் நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டால் மறைந்த நடிகர் மனோபாலா, மயில்சாமி, இயக்குநர் கஜேந்திரன் ஆகியோர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் ,மன்சூர் அலிகான் சொன்னது:

அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் நிகழ்ச்சியில் கூறி இருந்தது, இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடத்துவதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது என்னால் நம்ப முடிகிறது. நானும் மனோபாலா அண்ணனும் நிறைய குசும்பு செய்வோம். அதை அனைத்து கதாநாயகிகளுக்கும் தெரியும். நடிகர் சங்கம் துருப்பிடிச்சு கிடக்கு.

நடிகர் சங்கம் குறித்து சொன்னது:

தற்போது நடிகர்கள் 40, 50, 60 கோடிகள் என்று சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், ஏன் நடிகர் சங்கம் துருப்பிடித்து கிடக்குது என்று தெரியவில்லை. பல அரசியல் சம்பவங்களை நடிகர் சங்கம் செய்து இருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் வாழ்ந்த பூமி இது. நான் நடிகர் சங்கம் கட்டிடத்தில் இருந்த 25 தென்னை மரங்களுடன் பேசுவேன், விளையாடுவேன். ஆனால், இப்போது முடியவில்லை. மீண்டும் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement