தென் மாவட்டங்களை புரட்டி போட்ட கன மழை : ‘சீக்கிரம் செய்ங்க’ ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் மாரி செல்வராஜ் கோரிக்கை.

0
590
- Advertisement -

தென் மாவட்டங்களில், பல இடங்களில் கனமழை பொழிந்து வரும் கனமழை குறித்து மாரி செல்வராஜ் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டுஇருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், வெளிவர முடியாத சுழலில் ஏற்பட்டது. சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுது. இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

-விளம்பரம்-

புயல் கடந்து மழை படிப்படியாக குறைந்த போதிலும் பல்வேறு பகுதிகளில் தேங்கிய நீர் வெளியேற முடியாமல் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. பின்னர் படிப்படியாக நிலைமை சரியாகி மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.

- Advertisement -

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 16 ஆம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து பொய்த்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கனமழை அல்லது புயல் எச்சரிக்கை வந்தால் சென்னையில் உள்ள மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், முதன் முறையாக தென் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தால் பல ஊர்கள் ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சென்னையை விட தற்போது பெய்து வரும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த கனமழை குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

https://twitter.com/Shibin_twitz/status/17366619319711910

மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement