அரசு மீட்பு பணியில் இயக்குனருக்கு என்ன வேலை? குவிந்த விமர்சனங்கள், திமுகவினர் விளக்கம்.

0
518
- Advertisement -

நிகஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்களே இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டகங்களில் பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற முடியாமல் இருப்பதாகவும் விரைவில் அவர்களை மீட்க வேண்டும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிகளிலும் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார். இது தொடர்பாக மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்த பதிவில், “கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்… மீள்வோம்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அரசு மேற்கொள்ளும் மீட்பு பணியில் எப்படி ஒரு சினிமா இயக்குனர் இடம்பெறலாம் என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா’ இயக்குநர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவரது தந்தை வேறொரு ஊரில் சிக்கியுள்ளார். திருநெல்வேலியில் இருந்த மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊர் மக்களை மீட்க அமைச்சர் உதயநிதியிடம் உதவியைக் கோருகிறார். அப்போது நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அமைச்சர், நீங்க அங்கேயே இருங்க. கலெக்டரை சந்தித்து விட்டு நாங்கள் அங்கே வருகிறோம் என சொல்லி விட்டு இரவில் அந்த இடத்துக்குச் சென்றுள்ளார்.

ஆற்றில் நீரோட்டம் மிக அதிகமாக இருப்பதாலும், அன்று இரவும் கனமழை வரும் என்பதாலும் மீட்புப்பணி இப்போது சாத்தியமில்லை என்பதை அறிந்து கொள்கின்றனர். நாளை காலையில் நிலமையைப் பார்த்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என மாரியிடம் சொல்லி விட்டு அமைச்சர் அடுத்த இடத்துக்கு புறப்படுகிறார். ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கதைகளைக் கட்டினாலும் இதுதான் உண்மை என்பதை அங்கிருந்த ஓராயிரம் பேர்கள் அறிவார்கள்.

-விளம்பரம்-

சரி! அதெல்லாம் இருக்கட்டும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் இதை எப்படி உணர்வார்கள்? பெரிய சினிமா டைரக்டரா இருந்தாலும் நம்மூர் பையன் நமக்கு கஷ்டம் வரும்போது ஓடி வந்து நிற்கிறான் என்பார்கள். அமைச்சராகவே இருந்தாலும் நமக்கு ஓர் ஆபத்து என்றால், நம்ம ஊர் பையன் அழைத்தவுடன் நேரில் வந்து நின்றார் என நினைப்பார்கள். அமைச்சருக்கு நண்பர் என்றாலும் அரசு நிர்வாகம் முன்னுரிமை, சூழ்நிலை அடிப்படையில்தான் செயல்படுகிறது என்பதை மீட்புக்குழுவினர் புரிந்து கொள்வார்கள்.

இத்தகைய நம்பிக்கையும், புரிதலும்தான் பேரிடர் நேரத்தில் முக்கியமே தவிர, தொலைவில் நின்று வேடிக்கைப் பார்க்கும், எல்லாவற்றிலும் அரசியல் லாபம் தேடும் சல்லித்தனமான இழிபிறவிகளின் அவதூறுகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவை அல்ல. இந்த பொருநை வெள்ளம் வடியும் முன்னரே இவர்களின் இருப்பும் காலத்தால் மறக்கப்பட்டு விடும்’ இவ்வாறு அவர் பதிவுட்டுள்ளார்.

Advertisement