நேரில் சந்தித்த போது அப்படி சொல்லிட்டு இப்போ என்னை ஏமாற்றுகிறார் – கனகா குறித்து குட்டி பத்மினி

0
498
- Advertisement -

கனகா என்னை ஏமாற்றி விட்டாள் என்று குட்டி பத்மினி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, விஜயகாந்த், ராமராஜன் என்று டாப் நடிகர்களுடன் நடித்தவர் ‘கரகாட்டக்கார்ன்’ பட புகழ் கனகா. இவர் 80, 90 களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர். இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இன்னும் இவருடைய திருமண வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியவில்லை.

-விளம்பரம்-

கனகா குறித்த செய்தி:

அதோடு சில வருடங்களாகவே கனகாவை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. இதனால் பலரும் கனகா இறந்து விட்டார் என்றெல்லாம் வதந்திகளை கிளப்பி விட்டார்கள். பின் கடந்த ஆண்டு நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அதோடு சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்து இருக்கிறார் கனகா. இதனிடையே இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். பின் கனகா மற்றும் அவரின் வீட்டின் நிலைமை குறித்தும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

- Advertisement -

கனகா குறித்த தகவல்:

இதை பார்த்த பலருமே கனகாவிற்கு என்ன ஆனது? பல வருடங்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையாக இருக்க காரணம் என்ன? ஏன் இப்படி இருக்கிறார்? என்று பல கேள்விகள் எழுந்தது. ஆனால், அதற்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. தன்னுடைய தாயின் மறைவு, தனிப்பட்ட பிரச்சனை போன்ற பல காரணங்களினால் கனகா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வருவதும் இல்லை, யாரையும் சந்தித்து பேசுவதும் இல்லை. சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் மட்டுமே இருக்கிறார்.

குட்டி பத்மினி -கனகா சந்திப்பு:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகையும், தயாரிப்பாளரும் ஆன குட்டி பத்மினி கனகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, கனகா என்னிடம் நன்றாக பேசினார். அவளுடைய வாழ்க்கை குறித்து சில அறிகுறிகளை கூறினேன். அதோடு என்னுடைய சேனலில் ரசிகர்களுக்காக இன்டர்வியூ கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டாள் என்றெல்லாம் கூறியிருந்தார். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் எப்போ கனகாவுடைய இன்டர்வியூ எடுப்பீர்கள்? என்றெல்லாம் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக குட்டி பத்மினி, நான் கனகாவை சந்தித்தபோது அவரிடம் whatsapp கூட கிடையாது.

-விளம்பரம்-

குட்டி பத்மினி குறித்து சொன்னது:

அதற்குப் பிறகுதான் நான் அவருடைய மொபைலில் whatsapp ஆப்பை இன்ஸ்டாலே செய்தேன். பின் நான் பேட்டியளிப்பது குறித்து கனகாவை தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய எந்த காலையும் எடுக்கவில்லை. அதற்குப் பிறகு நிறைய மெசேஜையும் அனுப்பினேன். அவர் ரிப்ளை செய்யவில்லை. நான் அவரை சந்தித்தபோது ஒரு காபி ஷாப் சென்றோம். அப்போது அவர் வீட்டிற்கு வாங்க என்று கூட என்னை அழைக்கவில்லை. கனகா யாரையுமே சந்திக்க தயாராக இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்து விட்டது. அவர் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சியாக பேசிவிட்டு சென்றார்.

கனகா குறித்து சொன்னது:

அந்த நினைவு போதும். அவருக்கு தனிமை தான் ரொம்ப பிடித்திருக்கிறது. இனி யாரிடமாவது பழகினால் ஏமாந்து விடுவோமோ? என்று பயப்படுகிறாளா என்று தெரியவில்லை. ஆனால், கனகாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அவர் ஒத்துழைத்தால் தான் என்னால் அவருக்கு உதவ முடியும். அவரை வைத்து பேட்டி எடுக்க முடியாமல் போனது நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement