காமிக் உலகின் நாயகன்..!90கிட்ஸ் ஜாம்பவான் ஸ்டாலி காலமானார்..!

0
86
Stanlee

ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், அவெஞ்சர்ஸ் போன்றவற்றின் மூலம் மார்வெல்லை உலகம் முழுவதும் கொண்டுசென்றவர் ஸ்டான் லீ.தனது 95 வயதில் உடல் நல குறைவால் காலமாகியுள்ள செய்தி உலக திரையரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stanlee

பல வருடங்களாக டிஸ்னி காமிக்ஸ் நிறுவனமே காமிக்ஸ் உலகில் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த சமயம். சூப்பர் மேன், பேட் மேன், வொன்டர் வுமன் என்று புகழ்பெற்ற காமிக்ஸ்களை உருவாக்கியிருந்தார்கள்.அதற்கு போட்டியாக ஸ்டான் லீயின் உதவியோடு மார்வெல் நிறுவனம் சூப்பர் மேன்,எக்ஸ் மேன் என்று காமிக்ஸ் உலகில் சூப்பர் ஹீரோக்களுக்கு புத்துணர்வை வழங்கியது.

இவரது படைப்புகளை 90ஸ் கிட்ஸ் கண்டிப்பாக மறக்க முடியாது 95 வயதான அவரின் உடல்நிலை மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டதால், நேற்று திங்கட்கிழமை (12.11.2018) காலை சிடார்’ஸ் சினாய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்டான்லியின் இந்த இழப்பு ஹாலிவுட் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90ஸ் தலைமுறை முதல், புதிய தலைமுறைகள் வரை அனைவருக்கும் அன்பு, பண்பு, ஆச்சர்யம், நம்பிக்கை, சாகசம் என்று அனைத்தையும் நல்க இனி மீண்டுமொரு ஸ்டான் லீ வரவே முடியாது. சூப்பர் ஹீரோ வரலாற்றில் அவரின் இடம் என்றும் அவருக்கு மட்டுமே.