லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘அறம் 2’ பற்றிய அப்டேட்…!

0
132
Aram

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியானது அறம் திரைப்படம். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல் நல்ல ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Aram2

இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு மாவட்ட ஆட்சியாளராக நடித்திருந்தார். தமிழகத்தில் நடந்த பல்வேறு பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நயன்தாராவிற்கு ஒரு மயில் கல்லாக அமைந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஹீரோயின் சப்ஜெக்ட் கைதிகளில் மேலும் கவனம் செலுத்தினர்.

இந்நிலையில் அறம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அறம் 2 படத்தை இயக்க உள்ளதாக கோபி நயினார் தெரிவித்திருந்தார். அதன்படி நயன்தாரா அறம் 2 படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா புதிதாக மக்கள் இயக்கம் ஒன்று துவங்கி மக்களுக்காக போராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம் ‘ படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. எனவே அறம் 2 படத்தை பற்றிய அதிகாரபூர்வ விரைவில் வெளியாகும் என்று எதிரிபார்க்கபடுகிறது.