மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பாகவே கமல் தயாரிப்பில் கதை எழுத துவங்கிய லோகேஷ். ஹீரோ யாரு தெரியுமா ?

0
2945
lokesh
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். அதன் பிறகு இருவரும் தனியாக ஆளுக்கு ஒரு ரூட்டில் சென்று திரையுலகில் பயணித்து வருகின்றனர். தற்போது, பல வருடங்களுக்கு பிறகு அந்த மேஜிக் மீண்டும் நிகழப் போகிறது. ஆம்.. உச்ச நட்சத்திரங்களான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும் – ‘உலக நாயகன்’ கமல் ஹாசனும் ஒரு புதிய படத்துக்காக கைகோர்க்கப் போகிறார்கள்.

-விளம்பரம்-
Rajinikanth's movie 'Thalaivar 169' to be helmed by Kamal Haasan's ...

ரஜினி ஹீரோவாக நடிக்கப்போகும் இந்த படத்தை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் சார்பில் கமல் ஹாசன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்கப்போகும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.

இதையும் பாருங்க : ‘இங்க வாம்மா’ மருத்துவமனை வாசலில் கதறிய மகள் கட்டிப்போட்ட கடமை. செவிலியரின் பாசப்போராட்டம். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-
Buzz: Rajinikanth, Kamal Haasan and Lokesh Kanagaraj to come ...

இதற்கிடையில் சூப்பராக ஒரு கதையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் சொல்லி அசத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169-வது படமாம். இதில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல் ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

இதையும் பாருங்க : முகநூலை ஹேக் செய்த நபர்கள். மார்ப் செய்து வெளியிட்ட புகைப்படம் என்று அனுபமா வெளியிட்ட ஆதாரம்.

தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘தலைவர் 169’ படம் குறித்த செம மாஸ் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாராம். விரைவில் கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு, இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement