‘இங்க வாம்மா’ மருத்துவமனை வாசலில் கதறிய மகள் கட்டிப்போட்ட கடமை. செவிலியரின் பாசப்போராட்டம். வைரலாகும் வீடியோ.

0
1339
- Advertisement -

கொரோனாவின் பெயரை கேட்டு உலகமே நடுநடுங்கிப் போய் உள்ளது. சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனாவின் ஆட்டம் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னும் முடிந்தபாடில்லை. இந்த கொரோனாவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து உள்ளார்கள். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த கொரோனாவை எதிர்த்து மருத்துவர்கள், நர்ஸ்கள், காவல்துறை, சுகாதார பணியாளர்கள் என பலரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றார்கள்.

-விளம்பரம்-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் வீட்டுக்கு கூட செல்வதில்லை. அப்படியே சென்றாலும் வீட்டில் உள்ளவர்களிடம் தனித்தே இருக்கிறார்கள். சமீபத்தில் கூட மத்திய பிரதேசத்தில் மருத்துவர் ஒருவர் வீட்டுக்கு செல்லாமல் காரிலேயே தங்கி விடுகிறார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவில் நிகழ்ந்து உள்ளது.

- Advertisement -

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வருபவர் தான் சுனந்தா. இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வார்டில் பணி செய்து வருகிறார். இதன் காரணமாக இவர் கடந்த 15 நாட்களாக வீட்டுக்கு செல்லவில்லை. அந்த மாவட்டத்தில் மட்டும் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வரவில்லை சுனந்தா. வீட்டிற்கும் செல்லாமல் வீடுதியிலேயே தங்கிவிட்டார்.

சுனந்தா வீட்டில் உள்ளவர்கள் இதை புரிந்து கொண்டார்கள். இருந்தாலும் சுனந்தாவின் 3 வயது மகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த குழந்தை தன்னுடைய அம்மாவை காண முடியாத வருத்தத்தில் வீட்டிலேயே தினமும் அழுதபடி இருந்தாள். இந்நிலையில் நேற்று முன்தினம் சுனந்தாவின் கணவர் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தாயைப் பார்த்த குழந்தை தாயிடம் செல்ல பைக்கில் இருந்து கீழே இறங்க முயன்றது.

-விளம்பரம்-

ஆனால், கொரோனா பயம் காரணமாக சுனந்தா வேணாம் என்று சொன்னார். பின் தந்தை அந்தக் குழந்தையை பிடித்துக்கொண்டார். கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் சுனந்தாவால் தன் குழந்தையை தொட்டு தூக்க முடியவில்லை. குழந்தையும் அம்மா இங்க வாம்மா என்று கதறி எழுந்து தொடங்கியது. குழந்தையின் அழுகையை சுனந்தாவால் தாங்கிக் கொள்ள முடியாமல் சோகத்தில் கண்ணீர் வடிக்க தொடங்கினார். மருத்துவமனையில் நடந்த இந்த பாசப் போராட்டத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பார்த்து உள்ளார். பின் சுனந்தாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உங்கள் சொந்த குழந்தையை கூட பார்க்காமல் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். உங்களுடைய பாசப்போராட்ட வீடியோவை டிவியில் பார்த்தேன். தயவுசெய்து இன்னும் சிறிது நாள் ஒத்துழைக்கவும். எதிர்காலத்தில் உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் கடின உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement