அதுக்கு விஜய் தான் காரணம் – விஜய் சேதுபதி பளீர் பதில். இனி யாராவது அப்படி சொல்வீங்க. வீடியோ இதோ.

0
23626
vjs

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது.

Master's fierce third poster roars with rage; Ultimate Vijay vs Vijay  battle coming soon!

இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சென்னை கார்ஸ் கேர் எனும் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா திறப்பு விழாவில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். திறப்பு விழாவை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம் பத்திரிகையாளர் ஒருவர் மாஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்க்கு ‘விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். இது நிறைய பேருக்கு வாழ்க்கையை , நம்பிக்கையை தொடங்கி வைத்திருக்கிறது. படம் முழுக்க முழுக்க இப்படி வந்திருக்கிறது என்றால் விஜய் தான் அதற்கு முக்கிய காரணம்’ என்று கூறினார்.

அதே போல மாஸ்டர் என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி, “இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது.” என்று பதில் அளித்துளளார். இதன் மூலம் இனி யாரும் மாஸ்டர் படத்தை விஜய் சேதுபதி படம் இல்லை என்று நம்புவார்களா என்று தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement