எனக்கு 35 உனக்கு 31 – மாஸ்டர் மஹேந்திரனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் குறித்து கூறிய நடிகை.

0
539
Artham
- Advertisement -

ஹீரோ யாரென்று பார்க்க மாட்டேன், கதை, கதாபாத்திரம் பார்த்து தான் நடிப்பேன் என்று நடிகை ஷ்ரத்தா தாஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ஷ்ரத்தா தாஸ். பான் இந்தியா நடிகர் என்பதுபோல பான் இந்திய ஹீரோயினியாக ஷ்ரத்தா தாஸ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் மாடலும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். 2008-ஆம் ஆண்டு வெளிவந்த “சித்து ஃபிரம் சிககுளம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் இவர் நடிகையாக தன்னுடைய கேரியரை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஷ்ரத்தா தாஸ் நடிக்கும் தமிழ் படம்:

இவருக்கு எந்த ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது இவர் படங்களிலும், வெப் தொடர்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக ஷ்ரத்தா தாஸ் இருந்தாலும், தமிழில் மட்டும் இவர் நடிக்கவில்லை. தற்போது இவர் அர்த்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்த படம் சிறுபட்ஜெட் படம் என்று கூறப்படுகிறது. இந்த அர்த்தம் படத்தை மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்து இருக்கிறார்.

அர்த்தம் படம்:

இந்த படத்தை மணிகாந்த் தல்லகுடி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நந்தா, அஜய், ஆம்னி, ரோகினி உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாள மொழிகளில் இந்த படம் தயாராகி உள்ளது. மேலும், இந்த படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா தாஸ் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. மேலும், மாஸ்டர் மகேந்திரனுக்கு 31 வயது ஆனால் ஷ்ரத்தாவிற்கு 35 வயது இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தது குறித்து ஷ்ரத்தா தாஸ் இடம் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஷ்ரத்தா தாஸ் அளித்த பேட்டி:

அதற்கு அவர் கூறியிருந்தது, நான் இந்தியா மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். குழந்தை நட்சத்திரமாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், தமிழில் தான் என்னால் நடிக்க முடியவில்லை. அதற்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில சமயம் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. ஆனால், என்னால் நடிக்க முடியாமல் போனது. இப்போது அர்த்தம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறேன்.

மகேந்திரன் குறித்து சொன்னது:

இந்த படத்தில் நான் மனோதத்துவ டாக்டராக நடித்து இருக்கிறேன். நான் நிஜமாகவே சைகாடிஸ்ட் என்பதால் இந்த படத்தில் நடிப்பதற்கு எளிதாக இருந்தது. அதே போல், என்னைப் பொறுத்தவரை படத்தின் கதை என்ன? என்னுடைய கதாபாத்திரம் என்ன? என்பது மட்டும்தான் பார்ப்பேன். என்னுடன் நடிப்பவர் யாரென்று? நான் பார்த்ததில்லை. அப்படி தான் இந்த படத்திலும் நடிக்க சம்மதித்தேன். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

Advertisement