‘என்னை அவமானப்படுத்த முயற்சிகள் நடந்துள்ளன’ – மம்மூட்டி முதல் மோகன் லால் வரை பாவனாவின் பதிவிற்கு ஆதரவு.

0
358
bhavana
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் பாவனா தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்கள் கூலிப் படையை விட்டு ஏவி பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று.

-விளம்பரம்-

இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து இருந்தது. இதற்காக இவர் 85 நாள்கள் சிறையில் இருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. இப்படி ஒரு நிலையில் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் பிரபல சேனலுக்கு திலீப்புக்கு எதிராக பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார்.

- Advertisement -

இயக்குனர் பாலச்சந்திரகுமார் அளித்த புகார்:

அதில் அவர், திலீப் தான் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது பற்றிய ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அதோடு திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதனை தொடர்ந்து பாலசந்திரகுமார் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு திலீப் மீது எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு பின் பாவனா போட்ட பதிவு:

இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் எதிர்கொண்ட அவமானங்களை பற்றி முதன் முதலாக சமூக வலைத்தளங்களில் நடிகை பாவனா பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இது எளிதான பயணம் அல்ல. விக்டிமாக இருந்து சர்வைவராக மாறியதற்கான பயணம். ஐந்து வருடங்களாக என் மீது சுமத்தப்பட்ட தாக்குதலின் பாரத்தில் எனது பெயரும், அடையாளமும் நசுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் செய்தது நான் இல்லை.

-விளம்பரம்-

ஆதரவுக்கு நன்றி:

இருந்தாலும் என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலுக்கு ஆதரவாக சிலர் முன் வந்தனர். இப்போது எனக்காக ஒலிக்கும் பல குரல்களை கேட்கும் போது இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை என்பதை உணர்கிறேன். என் உடன் நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

பாவனாவுக்கு ஆதரவு கொடுக்கும் மலையாள திரையுலகம்:

இப்படி நடிகை பாவனா பதிவிட்ட பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து கருத்து போட்டு வருகிறார்கள். அந்த வகையில் மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பார்வதி, பிரித்திவி, மஞ்சுவாரியர் உட்பட பல நடிகர்கள் பாவனா போஸ்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நிற்கிறார்கள். தற்போது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமே பாவனாவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

Advertisement