அவ்வை சண்முகி மேக்கப் மேன் மகளுக்கு கமல் கொடுத்த பரிசு. இன்றோ அவர் ஹாலிவுட் நடிகை. புகைப்படம் இதோ.

0
65385

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை மெக்கென்ஸி. இவர் ஃபேஷன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் ஷெரிடன் கிரேன் லோபஸ்-ஃபிட்ஸ்ஜெரால்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான மேக்கப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோரின் மகளும் ஆவார். இந்நிலையில் நடிகை மெக்கென்ஸி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை மற்றும் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் உலக நாயகன் கமலஹாசன் குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு கமலஹாசன் அவர்களை நன்றாகவே தெரியும். பலபேர் கமலஹாசன் குறித்து என்னிடம் கேள்வி கேட்டுள்ளார்கள். நான் சிறு பெண்ணாக இருந்தபோது என் அப்பா அவருடைய ஒப்பனைக் கலைஞராக இருந்து உள்ளார். அவ்வை சண்முகி படத்தில் என் அப்பா கமல்ஹாசனுக்கு ஒப்பனைக் கலைஞராக இருந்து உள்ளார். அதனால் நாங்கள் இன்னும் அவருடன் தொடர்பில் இருக்கிறோம். மேலும், நான் கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கமலை பார்த்தேன்.

- Advertisement -

கமல் அவர்கள் நான் சிறு வயதாக இருக்கும்போதே ஒரு அழகான ஆடையை வழங்கியிருந்தார். அந்த இரண்டாவது புகைப்படத்தில் நானும், என் அப்பாவும் கமலஹாசன் வழங்கி ஆடை அணிந்து கொண்டு உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இவர் யார் என்று தெரியவில்லை நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்தது அருமை என்று பதிவிட்டிருந்தார். அதற்கு உடனடியாக மெக்கென்ஸி அவர்கள் கூறியிருப்பது இந்திய சினிமாவில் மிகப்பெரிய பெயர் கொண்டவர்.

ஹாலிவுட் நடிகரை விட பெரியவர் என்று கூறியுள்ளார். இன்னொரு நபர் அவர் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று வாழ்த்துக் கூறினார். பின்னர் அதுவே என் கனவு என்று மெக்கென்ஸி அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் அவ்வை சண்முகி, தசாவதாரம் திரைப்படத்தில் மைக்கேல் வெஸ்ட்மோர் இணைந்து பணியாற்றியுள்ளார். அதோடு இவர் தி நெக்ஸ்ட் ஜெனரேஷன், டீப் ஸ்பேஸ் நைன், வாயேஜர் மற்றும் எண்டர்பிரைஸ் போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement