சென்சார் இல்லை என்பதர்க்காக இப்படியா நடிப்பீங்க. மீனாவின் வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
323242
meena
- Advertisement -

தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்தும் தற்போதும் இளமையாக இருக்கும் பல்வேறு நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல நடிகையான மீனாவும் ஒருவர்தான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா.

-விளம்பரம்-

- Advertisement -

ரஜினி, கமல் மட்டுமல்லாது அதற்கு பின் வந்த அஜித், பிரசாந்த் என்று பல்வேறு நடிகைகளுடன் நடித்து விட்டார். மேலும், விஜய்யுடன் ‘ஷாஜஹான்’ படத்தில் விஜய்யுடன் குத்தாட்டமும் போட்டுள்ளார் மீனா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இதையும் பாருங்க : குழந்தையுடன் இருக்கும் சினேகா. மேக்கப் இல்லாமலும் எப்படி இருக்கார் பாருங்க.

மேலும், இவரது மகள் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார் திருமணத்திற்கு பின்னர் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்த மீனா அதன் பின்னர் அக்கா, அம்மா, அத்தை என்று துணை கதாபாத்திரத்தில் நடித்தது தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தார். தற்போதும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மீனா. மேலும், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெற்று வருகிறார்.

-விளம்பரம்-
https://www.youtube.com/watch?v=8T4EFOLGy5A

தற்போது நடிகை மீனா ‘கரோலின் காமாக்ஷி’ என்ற ஒரு இணையதள தொடரில் நடித்து வருகிறார். ஜி5 நிறுவனம் தயாரித்துள்ள இந்த சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த டீஸரில் இறுதியில் நடிகை மீனா சில கெட்ட வார்த்தை வசனங்களை பேசி இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் மீனாவும் இப்படிப் பேசியுள்ளார் என்று ஷாக்காகி உள்ளார்கள் .பொதுவாக சினிமாவைப் போல வெப்சீரிஸ் தொடர்களுக்கு எல்லாம் சென்சார் கிடையாது. அதனால் இது போன்ற தொடர்களில் ஆபாச காட்சிகளும், மோசமான வசனங்களும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், சென்சார் இல்லை என்பதற்காக மீனா போன்ற முன்னணி நடிகைகள் இப்படி மோசமான வசனம் பேசுவது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Advertisement