சிவாஜி வாழ்ந்த வீடு ஐயா அது. வருத்தத்தில் புலம்பும் திரையுலக பிரபலங்கள்.

0
249612
- Advertisement -

சினிமா திரை உலகில் நடிகர் திலகம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ‘சிவாஜி கணேசன்’ தான். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறமையால் பல சாதனைகளை புரிந்து உள்ளார். மேலும், இவர் முதன் முதலில் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவர் பராசக்தியில் தொடங்கி படையப்பா படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை முடித்து கொண்டார். இதுவரை சினிமா துறையில் சிவாஜி கணேசன் அவர்கள் 300க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். இவருடைய உண்மையான பெயர் கணேசன் தான். தந்தை பெரியார் தான் இவருக்கு சிவாஜி என்ற பெயரை வழங்கினார். அந்தளவிற்கு நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். மேலும், இவர் சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பெசன்ட் சாலை கதவு எண் 7 என்ற வீட்டில் தான் ஆரம்பத்தில் வசித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for sivaji ganeshan production"

- Advertisement -

இது தான் அவர்களுடைய வீட்டின் முகவரி என்று கூட சொல்லலாம். சிவாஜி கணேசன் அவர்களுடைய மனைவி கமலா. மேலும்,இவர்களுக்கு நான்கு குழந்தைகள் அதாவது மகன்கள் ராம்குமார், பிரபு; மகள்கள் சாந்தி,தேன்மொழி ஆவார். முதலில் இவர் தன்னுடைய பிள்ளைகளோடு ராயப்பேட்டை வீட்டில் தான் வாழ்ந்து வந்தார். பின் பிள்ளைகள் வளர்ந்த பிறகு சிவாஜி குடும்பமே தி.நகரில் தற்போது இருக்கும் ‘அன்னை இல்லத்துக்கு’ சென்று விட்டார்கள். மேலும், சில ஆண்டுகளாகவே சிவாஜி கணேசன் அவர்கள் முதலில் வாழ்ந்த வீடு ‘சிவாஜி புரடக்ஷன்’ அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த வீடு சிவாஜி குடும்பத்திடம் இருந்து வேறொருவர் கைக்கு மாறி விட்டது. இது குறித்து பார்க்கையில்…. சினிமா என்று சொன்னாலே கோடம்பாக்கம் ஏரியா தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வரும். அதே போல் அந்த காலகட்டத்தில் சென்னை ராயப்பேட்டை தான் பிரபலம்.

இதையும் பாருங்க : சென்சார் இல்லை என்பதர்க்காக இப்படியா நடிப்பீங்க. மீனாவின் வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

ஏனென்றால் டி.கே.சண்முகம், ரெட் ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடக கம்பெனிகள் ராயப்பேட்டை ஏரியாவில் தான் இருந்தது. அது மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், எம்.என்.ராஜம், எம்.என்.நம்பியார், ஜி.ராமநாதன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த பகுதியில் தான் வசித்து வந்தார்கள். இதனால் கூட சிவாஜியும் அங்கு இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். மேலும், கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய அண்ணன் வீடு அங்கு தான் இருந்தது. இதனால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அந்த ஏரியாவில் தான் நிறைய பாடல்களை எழுதியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ‘புதிய பறவை’ படத்தில் கூட சிவாஜியின் வீடு வந்திருக்கும். மேலும், சிவாஜி குடும்பம் டிநகரில் அன்னை இல்லத்துக்கு வந்த பிறகு அந்த வீட்டை சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகம் ஆக மாற்றி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் ‘சந்திரமுகி’ படம் எடுக்கும் போதெல்லாம் இங்கு தான் எல்லா வேலைகளும் நடந்தன என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பிறகு சிவாஜி புரடக்ஷன் படங்கள் தயாரிப்பதை சமீபகாலமாக நிறுத்திவிட்டார்கள். மேலும், இந்த சொத்தை வேறு ஒருவருக்கு விட்டு விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவாஜி வாழ்ந்த அந்தக் கோவிலை அப்படியே விடலாம் என்று கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் புதிதாக வாங்கியவர்கள் இதை இடித்துக் ப்ளட்டாக கட்டி விடுவார்கள். இதனால் அந்த கலைத் தாய் கொடுத்த நம்ம நடிகர் திலகம் வாழ்ந்த அடையாளமே இல்லாமல் போய்விடும் என ஆதங்கத்துடன் அந்த பகுதியில் வசிக்கும் பிரபலங்கள் கூறி வருகின்றனர். மேலும், சிவாஜியின் வீடு இடிக்கக் கூடாது என்றும் பலர் பேர் கோரிக்கை வைத்தும் வருகின்றனர்.

Advertisement