சிங்கம் படத்தில் நடிக்குகம்போது என் மேல் அவருக்கு காதல் வந்தது ! பிரபல சீரியல் நடிகை அதிரடி !

0
2250

சின்னத்திரை சீரியலில் பொறுமையான பெண்ணாக யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர், வனஜா. விஜய் தொலைக்காட்சியின் மூலமாக சின்னத்திரையில் நுழைந்தவர். சன் டிவியில் தொடர்ச்சியாகப் பல சீரியல்களில் நடித்தவர். தற்போது, நடிப்புக்கு பிரேக் எடுத்திருப்பவரிடம் பழைய அனுபவங்களை ரீவைண்ட் செய்யச் சொன்னோம். அதற்குமுன் அவரைப் பற்றிய ஒரு குட்டி பயோ…

actress vanaja

சிங்கம் (1)’ படத்துக்காக டைரக்டர் ஹரி ஆடிஷனுக்கு வரச் சொல்லியிருந்தார். முதலில் என் ரோல் பற்றி சொல்லலை. நடிக்க ஆரம்பிக்கும்போதுதான் நெகட்டிவ் ரோல்னு தெரிஞ்சது. கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. `யோசிக்காதீங்க. நீங்க நடிச்சாதான் சரியா இருக்கும்’னு சொன்னாங்க. ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட் எந்தக் கதாபாத்திரத்தையும் உள்வாங்கி நடிக்கணும்.

நானும் நடிச்சேன். ஹரி சாரின் அசிஸ்டென்ட்தான் என் கணவர். அந்தப் படத்தில் நடிச்சப்போ எங்க சந்திப்பு நடந்துச்சு. கல்யாணம் பண்ணிக்க விரும்பி வீட்டுக்கு வந்து பெண் கேட்டார். இப்போ எங்களுக்கு ரெண்டு பசங்க. கல்யாணத்துக்கு அப்புறம் `பொன்னூஞ்சல்’ சீரியலில் மூன்று வருஷம் நடிச்சேன். கர்ப்பமானதும் சீரியலுக்கு பிரேக் எடுத்துக்கிட்டேன்” என்றவர். ஓர் அம்மாவாக தன் குழந்தைகள் பக்கம் பயணிக்கிறார்.

vanaja

சாயங்காலம் 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வரிசையாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு சீரியல் தவிர மற்ற எல்லாத்திலும் என்னைப் பார்க்கலாம் என்கிற அளவுக்கு பிஸியா நடிச்சேன். சீரியலில் எப்படிப் பாசமும் பொறுமையும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பேனோ, நிஜத்திலும் அப்படித்தான். எந்த விஷயத்திலும் ஓவர் எமோஷனல் ஆகாமல் யோசிச்சு முடிவுப் பண்ணுவேன்” என்று புன்னகையுடன் தொடர்கிறார் வனஜா.