அட கொடுமையே, சூப்பர் ஸ்டார் மகளை தொடர்ந்து மெகா ஸ்டார் வீட்டிலும் விவாகரத்தா ? – என்னதான்யா நடக்குது.

0
424
chiranjeevi
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் பிரபலங்களின் விவாகரத்து குறித்த தகவல்கள் அதிகமாக வருகிறது. அதிலும் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் விவாகரத்து செய்வது சர்வ சாதாரணமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவரை பிரிய போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து அனைவருக்கும் தெரிந்ததே ஒன்றே. இவர்களுடைய விவாகரத்து குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்கள் கருத்துகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பி இருந்தது.

-விளம்பரம்-
Megastar Chiranjeevi on Twitter: "Wishing Super Star RAJINIKANTH sir A Very  Happy Birthday from #CHIRANJEEVIFans #HBDSuperStarRajinikanth  #HappyBirthdayRajini https://t.co/NPEMyAef5H" / Twitter

அதுமட்டுமில்லாமல் இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த தகவல் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கின்றது. நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:

மேலும், திருமணம் ஆகி 18 ஆண்டுகள் முடிந்த நிலையில் தனுஷின் இந்த முடிவு குறித்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதோடு இவர்களின் பிரிவிற்கு தனுஷ் இதுவரை சிக்கிய சர்ச்சைகள் தான் காரணம் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வந்துள்ளது.

Chiranjeevi's daughter Sreeja heads for divorce?

ஸ்ரீஜா விவாகரத்து குறித்த விவகாரம்:

நடிகர் கல்யாண் தேவ் என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஸ்ரீஜா இன்ஸ்டாகிராமில் தன் கணவர் பெயரை இணைத்து ஸ்ரீஜா கல்யாண் என்று வைத்திருந்தார். ஆனால், இப்போது சமந்தாவை போலவே ஸ்ரீஜாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பெயருக்குப் பின்னால் இருந்த கணவரின் பெயரை நீக்கினார்.

-விளம்பரம்-

இன்ஸ்டாவில் பெயர் மாற்றிய ஸ்ரீஜா:

அதை நீக்கி சிரஞ்சீவியின் குடும்பப் பெயரான கொனிடேலா என்பதை சேர்த்துள்ளார். இதனால் ஸ்ரீஜா தன் கணவரை பிரிய தயாராகி விட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், அந்த செய்திகளை சிரஞ்சீவி குடும்பத்தில் யாரும் மறுக்கவும் இல்லை, அதற்காக பதிலளிக்கவும் இல்லை. அதுமட்டுமில்லாமல் ஸ்ரீஜா தான் கல்லூரியில் படித்த போது சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து சிரஞ்சீவியின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்துடன் ஸ்ரீஜா

ஸ்ரீஜாவின் முதல் கல்யாணம்:

அப்போது அவருக்கு 19 வயது தான் ஆனது. பின் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி சட்டபூர்வமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று ஸ்ரீஜா பிரிந்தார். அதோடு தன்னை துன்புறுத்தியதற்காக சிரிஷ்க்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் சோஷியல் மீடியாவில் உலா வருவதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Advertisement