உலகளவில் விஜய் படைத்த சாதனை.! சீனாவில் கலக்கப்போகும் மெர்சல்..!

0
1816
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதிலும் இந்த படம் வெளியான பின்னர் ஒரு சில அரசியில் பிரபலங்கள் செய்த பிரச்சனையால் இந்த படம் மேலும் ஹிட் அடைந்தது.சமீபத்தில் விஜய் டீவியால் நடந்தபட்ட விஜய் அவார்ட்ஸ் விழாவில் “மெர்சல்” படத்தை இயக்கிய அட்லீக்கு அபிமான இயக்குனர் என்ற விருதும், விஜய்க்கு அபிமான நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் படத்திற்கு சீனா நாட்டில் சர்வதேச அளவில் மற்றும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

-விளம்பரம்-

Mersal

- Advertisement -

விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படத்தை சீனா நாட்டில் வெளியிட திட்டம்மிட்டுள்ளனராம். இந்த படத்திற்கான உரிமத்தை எச்.ஜி.சி என்டர்டைன்மன்ட் என்ற சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாம். மேலும், இந்த படத்தை மாண்டரின் மொழியில் மொழிமாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற பிபான்(BIFAN) திரைப்பட விழாவில் ஆசிய அளவில் சிறந்த திரைப்படம் (Best Of Asian Cinema ) என்ற அங்கீகாரத்தை ‘மெர்சல்’ படம் பெற்றிருந்தது. அதே போல சர்வேதச அளவில் ஆண்டுதோருக்கும் IARA என்ற விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டு சிறந்த நடிகர்கள் பட்டியலில் ‘மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக விஜய்யின் பெயரும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

mersal

இந்த பட்டியலில் சர்வேதேச அளவில் 8 நடிகர்கள் இடம்பெற்று இருந்தனர், அதில் இந்திய நடிகர்களில் இடம் பெற்றது நடிகர் விஜய் மட்டும் தான். இந்த விடயம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்திருந்த நிலையில், தற்போது “மெர்சல் ” படம் சீனாவில் வெளியவப்போவதை எண்ணி படகுழுவினரும் ,விஜய் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் திகைத்து வருகின்றனர்.

Advertisement